Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

அரசியல் செய்திகள் வாசிக்கும்போது எதிர்ப்பு வரும்! -ஸ்ரீலேகா பேட்டி

21 மார்,2017 - 08:30 IST
எழுத்தின் அளவு:

ஒரு வருடமாக பாலிமர் சேனலில் செய்தி வாசித்து வருபவர் ஸ்ரீலேகா. தனது வசீகர குரலாலும், தமிழ் உச்சரிப்பினாலும் நேயர்களின் மனதில் இடம்பிடித்துள்ள அவர், அரசியல் கட்சிகளுக்கு எதிர்ப்பான செய்திகள் வாசிக்கும்போது சிலசமயங்களில் எதிர்ப்பு வரும் என்கிறார்.

தினமலர் இணையதளத்திற்கு ஸ்ரீலேகா அளித்த பேட்டி...

கடந்த ஒரு வருடமாக பாலிமர் சேனலில் செய்தி வாசித்து வருகிறேன். செய்தி வாசிப்பவருக்கு முகபாவணையும் முக்கியம். அதனால் அந்தந்த செய்திகளுக்கேற்ப மகிழ்ச்சி, அதிர்ச்சி, சோகம் என முகத்தில் பிரதிபலித்தபடி வாசிக்க வேண்டும். தினமும் செய்தி படித்து வருவதால் செய்திகளுக்கேற்ப எங்களது முகம் தானாக மாறி விடும்.


செய்தி வாசிப்பதில் ரிஸ்க் உள்ளதா?
சில டயம், அரசியல்வாதிகளுக்கு எதிராக செய்தி வாசிக்கும்போது வெளியில் பார்த்தால் கேட்பார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் கேட்கமாட்டார்கள். கட்சிகாரர்கள் யாராவது கேட்பார்கள். முக்கியமாக நகரத்தில் உள்ளவர்கள் கேட்கமாட்டார்கள். ஊர்களில் உள்ளவர்கள் கேட்பார்கள். ஏன் அந்தமாதிரி செய்தி வாசிக்கிறீங்க என்பார்கள். இன்னும் சிலர், அத்தனை செய்திகளையும் மனப்பாடம் பண்ணியா படிப்பீர்கள் என்று கேட்பார்கள். உலக விசயங்கள் எல்லாமே உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கமில்ல என்பார்கள். நீங்க ரொம்ப பிரிலியண்டா என்பார்கள். இப்படி அவர்களுக்கு என்ன கேட்க தோன்றுகிறதோ அதை கேட்பார்கள். அப்போது நான் அவர்களிடம் அதுபற்றி புரியும்படி சொல் லும்போது ஓ அப்படியா -என்று அதுபற்றி புரிந்து கொண்ட தெளிவான மனநிலைக்கு வருவார்கள்.


செய்தி வாசிப்பவர்கள் நாட்டு நடப்புகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் அல்லவா?


கண்டிப்பாக நிறைய தெரிந்து வைத்திருக்க வேண்டும். லைவ் நியூஸ் போய்க் கொண்டிருக்கும்போது அவசரத்தில் செய்தி எழுதுவார்கள். அப்போது அவர்களையும் அறியாமல் எதோ ஒரு தவறு நேர்ந்தால், அந்த செய்தியை வாசிக்கும் நாங்கள் அதை சரிபண்ணி வாசிக்க வேண்டும். அதனால் முடிந்தவரை உலக விசயங்களை தெரிந்து வைத்திருப்போம்.


தவறுதலாக வாசித்தால், சேனல்தரப்பில் பிரச்சினை வருமா?


அதிமுக என்பதை திமுக என்று அவசரத்தில் படித்துவிட்டால் பெரிய தவறாகி விடும். சேனலிலும் கேட்பார்கள், கட்சிகாரங்களும் கேட்பார்கள். இப்போது பெரும்பாலும் நியூஸ் சேனல்களில் லைவ்தான். அதனால் ரொம்ப கவனமாகத் தான் படிக்கனும்.


குரல் பராமரிப்பு?


நார்மலா எல்லோரையும் போல்தான் இருப்பேன். என்றாலும் ஐஸ்கிரீம் மற்றும் குரலை பாதிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள மாட்டேன். முக்கியமாக ஜலதோஷம் வராமல் பார்த்துக்கொள்வேன்.


சீரியலில் நடிக்கும் ஆசை?


திருமுருகன் சீரியலில் நெகடீவ் ரோலில் நடிக்க கேட்டிருந்தனர். நான் போய் நடித்துக்காட்டினேன். எனது பர்பாமென்ஸைப் பார்த்து, செய்தி வாசிப்பாளரா இவ்வளவு நன்றாக நடிக்கிறீர்கள் என்று ஆச்சர்யப்பட்டார். ஆனால் படப்பிடிப்பு டெல்லியில் என்றதும் எனது வீட்டில் ஒத்துக்கொள்ளவில்லை. மேலும், தற்போது செய்தி வாசிப்புக்கு நடுவே ஈவண்ட்ஸ் பண்ணி வருகிறேன். ஸ்டேஸ் ஷோக்கள் நடத்துகிறேன். அதிலும் பிசியாக இருப்பதால், நடிப்பதில் ஆர்வம் இல்லை. செய்தி வாசிப்பு, ஈவண்ட்ஸ் செய்து கொண்டிருந்தாலே போதும் என்று நினைக்கிறேன் என்கிறார் ஸ்ரீலேகா.Advertisement
திறமைக்கு மேடை அமைத்து தரும் ‛யப்-டிவி., ஒரிஜினல்ஸ்'திறமைக்கு மேடை அமைத்து தரும் ... தமிழக விவசாயிகளுக்காக வேண்டுகோள் விடுத்த திவ்யதர்ஷினி! தமிழக விவசாயிகளுக்காக வேண்டுகோள் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Thupparivaalan
  • துப்பறிவாளன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : அனு இமானுவல் ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :மிஷ்கின்
  Tamil New Film bongu
  • போங்கு
  • நடிகர் : நட்ராஜ்
  • நடிகை : ருகி சிங்
  • இயக்குனர் :தாஜ்
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film odi odi ulaikanum

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in