மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
புதிதாக தொடங்கப்பட்டுள்ள விஜய் சூப்பர் தொலைக்காட்சியில் விஜய் டி.வியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் அனைத்து தொடர்களும் மறுஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. விஜய் டி.வியில் தொடரை தவற விடுகிறவர்கள் விஜய் சூப்பரில் பார்த்துக் கொள்ளலாம். அது மட்டுமல்ல ஒரு காலத்தில் விஜய் டி.வியில் சக்கை போடு போட்ட நிகழ்ச்சிகளும் விஜய் சூப்பரில் ஒளிபரப்பாகி வருகிறது. மகாபாரதம் தொடர் முதல் முதல் பாலியல் நிகழ்ச்சியான புதிரா புனிதமா வரையிலும் ஒளிபரப்பாகிறது. சில முக்கிய நிகழ்ச்சியின் விபரம் வருமாறு...
காலை 10 மணிக்கு மகான், 11 மணிக்கு சீதையில் ராமன், 11.30 மணிக்கு மகாபாரதம், 12 மணிக்கு காவியாஞ்சலி, 12.30க்கு சலனம், பகல் 1 மணிக்கு அக்னி சாட்சி, 1.30க்கு பூவிலங்கு, மாலை 5 மணிக்கு மாயா மச்சீந்திரா, இரவு 7.30 மணிக்கு இது ஒரு காதல் கதை, 8 மணிக்கு கனா காணும் காலங்கள், 9 மணிக்கு கலக்கப்போவது யாரு, 11 மணிக்கு புதிரா புனிதமா.
கிரிக்கெட், கால்பந்து உலக போட்டிகள், டிஸ்கவரி சேனலில் வருவது போன்ற விலங்குகள் பற்றிய நிகழ்ச்சிகள், டூரிசம் தொடர்பான நிகழ்ச்சிகள், புகழ்பெற்ற சமையல் நிகழ்ச்சிகளும் தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது. இன்னும் பல சர்ப்பரைஸ்கள் காத்திருக்கிறது என்கிறது சேனல் வட்டாரம்.