சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

விஜய் டிவியில் வெளியான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தவர் மிர்ச்சி செந்தில். அந்த தொடரில் மீனாட்சியாக நடித்தவர் ஸ்ரீஜா. விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர்களில் பெரிய அளவில் பேசப்பட்ட அந்த தொடரில் நடித்து வந்தபோது காதலில் விழுந்த செந்தில்-ஸ்ரீஜா இருவரும் பின்னர் திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாகி விட்டனர். அதன்பிறகும் சரவணன் மீனாட்சி 3வது சீசன் தொடர்ந்து கொண்டிருக்கிறது. என்றாலும், மிர்ச்சி செந்தில்-ஸ்ரீஜா நடித்தபோது இருந்த பரபரப்பு இப்போதைய சீசன்களில் இல்லை.
இந்நிலையில், மீண்டும் சரவணன் மீனாட்சி முதல் சீசனில் நடித்த மிர்ச்சி செந்தில்-ஸ்ரீஜாவை ஜோடி சேர்த்து மாப்பிள்ளை என்ற தொடர் தற்போது தயாராகி வருகிறது. நாளை முதல் அந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளது. மேலும், இந்த மாப்பிள்ளை தொடர், சமீபகாலமாக கணவன்-மனைவிகளுக்கிடையே ஏற்படும் ஈகோ பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு கதையில் உருவாகிறது.
இதுபற்றி மிர்ச்சி செந்தில் கூறுகையில், மீண்டும் என் மனைவி ஸ்ரீஜாவுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சரவணன் மீனாட்சியில் நடித்தபோது எங்களுக்கிடையே காதல் மலர்ந்தது. அந்த ரொம்ப இனிமையான அனுபவ மாக இருந்தது. இப்போது அவர் எனது மனைவியாகிவிட்டார். நாங்கள் கணவன் மனைவியாகவே நடிக்கிறோம். அது மகிழ்ச்சியாக உள்ளது.
ஆனால் நிஜவாழ்க்கையில் ஈகோ என்பது துளியும் இல்லாமல் விட்டக்கொடுத்து வாழ்ந்து வருகிறோம். இருப்பினும் இந்த தொடரில் நாங்கள் ஈகோ உடைய வர்களாக நடிக்கிறார்களாம். அந்த வகையில், இந்த தொடர் எங்களுக்கு இன்னொரு புதுமையான அனுபவத்தை கொடுக்கும். அதோடு, சரவணன் மீனாட்சி மூலம் எங்களுக்கு பெரிய வரவேற்பு கொடுத்த டிவி நேயர்கள் இந்த மாப்பிள்ளை தொடருக்கும் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்கிறார்.