திரைப்படத் தொழிலாளர்களுக்கும் பங்கு: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு | காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை | மீண்டும் மகன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் ? | கேஜிஎப் ஒளிப்பதிவாளர் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ லீலா | டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் |

நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி. சின்னத்திரையில் பகுதிநேர தொகுப்பாளினியாக இருந்தார். நகுலை பேட்டி எடுக்கக்போன இடத்தில் காதல் உருவாகி அது கசிந்துருகி கல்யாணத்திலும் முடிந்தது. திருமணம் முடிந்ததும் முழுநேர தொகுப்பாளினி ஆகிவிட்டார் ஸ்ருதி.
புதிய தலைமுறை டிவியில் இவர் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் ஊரும் உணவும் நிகழ்ச்சி செம ஹிட். காரணம் விதவிதமான கிராமத்து உணவுகள் அதை தொகுத்து வழங்கும் ஸ்ருதியின் ஸ்டைல், ஆங்கில சேனல்களில் வரும் சமையல் நிகழ்ச்சி போன்று திடீரென்று ஒரு கிராமத்துக்குள் போகிறார். அங்குள்ளவர்களிடம் இந்த ஊரில் என்ன சாப்பாடு விசேஷம் என்று கேட்கிறார். அதை செய்வதில் யார் ஸ்பெஷலிஸ்ட் என்று கேட்டு தெரிந்து கொள்கிறார். அதன் பிறகு அவர்களை அதை செய்ய வைத்து ருசித்து சாப்பிட்டுவிட்டு அடுத்த ஊருக்கு கிளம்புகிறார்.
ஸகூட்டியில், சைக்கிளில், மாட்டு வண்டியில் இப்படி கிடைத்த வாகனத்தில் ஏறி ஊர் ஊராக செல்கிறார். இந்த நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு மறு ஒளிபரப்பாகிறது. நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்த பல திட்டங்கள் வைத்திருக்கிறாராம் ஸ்ருதி நகுல்.