ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
சினிமா இயக்குனர் பாலசந்தர், "தாதா சாகேப் பால்கே விருது பெறுவதை பெருமைப்படுத்தும் விதமாக, "சிகரத்துக்கு ஒரு மகுடம் என்ற சிறப்பு நிகழ்ச்சி தூர்தர்ஷனின் ஒளிபரப்பாகிறது. இந்திய திரைப்படத்துறையின் மிக உயரிய விருதான, தாதா சாகிப் பால்கே விருது, சினிமா இயக்குனர் கே.பாலசந்தருக்கு இவ்வாண்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது, நாளை ( செப்., 9) டில்லியில் நடக்கும், "தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், ஜனாதிபதியால் வழங்கப்படுகிறது. இவ்விழாவையொட்டி, கே.பாலசந்தரின் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி,"சிகரத்துக்கு ஒரு மகுடம் என்ற தலைப்பில், தூர்தர்ஷன் பொதிகையில், இன்று(08.09.11) இரவு 9 .30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அவரது ஆங்கிலப் பேட்டி, தூர்தர்ஷன், தேசிய ஒளிபரப்பில், நாளை காலை 8. 30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த இரு நிகழ்ச்சிகளையும், சென்னை தொலைக்காட்சியின் தயாரிப்பாளர் தொல்காப்பியன் தயாரித்துள்ளார்.