சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |
பெண்கள் அனைவரும் சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற நோக்கில், கேப்டன் டிவியில் சுயதொழில் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. மூத்த அரசியல் கட்சிகளுக்கு இணையாக, தேமுதிக சார்பில் கேப்டன் டிவி தொடங்கப்பட்ட நாளில் இருந்து, புதுமையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். செய்திகளில் நடுநிலைமை என்று கூறிவிட்டு, விஜயகாந்த் புகழ் பாடுவதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருக்கும் கேப்டன் டிவியில், பெண்களை கவரும் வகையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12 மணிக்கு சந்தையில் உள்ள புதுவிதமான பொருள்களை அறிமுகப்படுத்தும் "ஷாப்பிங் டைம் நிகழ்ச்சி இடம் பெறுகிறது. இல்லத்தரசிகளுக்கு அறுசுவை உணவு வகைகளை செய்து பழக "சமைக்கலாம் வாங்க என்ற பகுதியும், மகளிருக்கான அழகு குறிப்புகள் "டிப்ஸ் பகுதியும் இடம் பெறுகின்றன. அதைவிட முக்கியமாக பெண்கள் அனைவரும் சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற நோக்கில் `சுய தொழில் என்ற பகுதியும் இடம் பெறுகிறது. இந்த நிகழ்ச்சிகள் எல்லாமே பெண்களை கவரும் வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.




