சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |
ஜெயா டிவியில் "ஜெயிக்கப் போவது யாரு? என்ற பெயரில் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அசத்தப்போவது யாரு? கலக்கப்போவது யாரு? என்ற பெயர்களில் வேறு டிவிக்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் இந்த நிகழ்ச்சி மூலம் பல்வேறு திறமையான சாதனையாளர்களை அடையாளம் காணலாம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலவித திறமையான கலைஞர்கள், திகிலூட்டும் ஆச்சரியங்களை நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள். உலகத்தின் எந்த மூலையில் இருப்பவரும் வித்தியாசமான திறமை இருந்தால் கலந்து கொள்ளலாம்.
நிகழ்ச்சியை நடிகர் சுரேஷ் தொகுத்து வழங்குகிறார். நடுவர்களாக பலவித கலைகளின் ஆசான் ஹுசைனி, நடன இயக்குனர் ஸ்ரீதர், நடிகை சந்தியா ஆகிய மூவரும் இணைந்து வெற்றியாளர்களைத் தேர்வு செய்கின்றனர். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.




