ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
13-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் ஜெயா டி.வி., அந்த சந்தோஷத்தில், நேயர்களுக்கு பல புதுமையான நிகழ்ச்சிகள் பலவற்றையும், பழைய நிகழ்ச்சிகள் சிலவற்றில் புதிய மெருகேற்றியும் நிறைய புதுமைகளை செய்து, நிறைய நிகழ்ச்சிகளையும், லைவ்ஷோக்களாகவும், டாக் ஷோக்களாகவும், கேம்ஷோக்களாகவும் வழங்க இருக்கிறது!
அதன் முதற்கட்டமாக ஜெயா டி.வி.யில் பத்து வருடங்களாக புகழ்பெற்ற நிகழ்ச்சியான ஜாக்பாட் நிகழ்ச்சியை இனி நடிகை சிம்ரன், இன்று செப்.4 முதல் நடத்த இருப்பது போன்றே, திங்கட்கிழமை பிரபல கார்ட்டூனிஸ்டும், பத்திரிகையாளருமான மதனின் திரை விமர்சனம் அடங்கிய மதன் டாக்கீஸ், வியாழக்கிழமைகளில் மாஜி ஹீரோ சுரேஷ் நடத்தும் ஜெயிக்கப்போவது யாரு...?, வெள்ளிக்கிழமைகளில் தமிழகத்தின் சமையல் சாம்பியன் யாரு...? எனும் சமையல் பரிசு போட்டி நிகழ்ச்சி, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் யூகியுடன் யூகியுங்கள் எனும் வித்தியாசமான வினாடி-வினா போட்டி நிகழ்ச்சி மற்றும் சனிக்கிழமைகளில் அனுஹாசன் நடத்தும் சூப்பர் கிட் எனும் பள்ளி மாணவர்களுக்கான பல லட்சம் பரிசு போட்டிகளுக்கான நிகழ்ச்சி என களைகட்ட இருக்கிறது ஜெயா டி.வி.,
இதுசம்பந்தமான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை சிம்ரன், மதன், யூகி சேது, சமையல் செஃப்கள் சவுந்திராஜன், கவுசிக், மனோகர் உள்ளிட்டோருடன் ஜெயா டி.வி., நிர்வாகிகளும் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களுக்கு பதிலளித்தனர். அவர்களது பதில்களை போன்றே ஜெயா டி.வி.யின் புதிய நிகழ்ச்சிகளும் பளிச்சிட வாழ்த்துவோம்!