சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |
ஜெயா டி.வி., நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான ஜாக்பாட் நிகழ்ச்சியை, இனிமேல் சிம்ரன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். ஜெயா டி.வி., நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானாவை ஞாயிற்றுகிழமை ஒளிப்பரப்பாகும் ஜாக்பாட் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் நடிகை குஷ்பு நடத்தி வந்தார். மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி அமோக வரவேற்பை பெற்றது. இதற்கு காரணம் நிகழ்ச்சியை காட்டிலும், குஷ்பு அணிந்து வந்த விதவிதமான புடவைகள் மற்றும் ஜாக்கெட் போன்றவை தான். ஜாக்பாட் நிகழ்ச்சி நன்றாக சென்று கொண்டு இருக்கையில், குஷ்பு தி.மு.க.,வில் சேர்ந்தார். இதனையடுத்து அந்த நிகழ்ச்சியில் இருந்து குஷ்பு நீக்கப்பட்டார்.
குஷ்புக்கு பதிலாக அந்த நிகழ்ச்சியை நடிகை நதியா ஏற்று நடத்த ஆரம்பித்தார். ஆனால் குஷ்பு ரேஞ்சுக்கு நிகழ்ச்சி விறுவிறுப்பாக அமையவில்லை. இருந்தும் நதியாவே நிகழ்ச்சியை நடத்தி வந்தார். இடையில் நமீதாவை வைத்து நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் கடைசியில் சிலபல பிரச்சனைகளால் அவர் விலகி கொண்டார்.
இந்நிலையில் தொடர்ந்து ஜாக்பாட் நிகழ்ச்சியை நடத்தி வந்த நதியாவுக்கு, மும்பைக்கும் சென்னைக்கும் வந்து போக சிரமம் ஏற்படுள்ளதாம், இதனையடுத்து நதியாவும் மாற்றப்பட்டு அந்த இடத்திற்கு இப்போது, ரசிகர்கள் இதயத்தில் நீங்கா இடம்பெற்ற சிம்ரன் வந்துள்ளார். இதனை ஜெயா டி.வி., உறுதிபட அறிவித்து உள்ளது. சமீபத்தில் தன்னுடைய 2வது மகன் ஆதித் பிறந்த பிறகு சற்று எடை போட்டு இருப்பதாக கூறும் சிம்ரன், இனி ஜாக்பாட் நிகழ்ச்சிக்காக எடையை குறைக்க போவதாகவும், மீண்டும் ஜெயா டி.வி.,யின் மூலம் ரசிகர்களை சந்திக்க போவதாகவும் மகிழ்ச்சி பட கூறுகிறார்.
மேலும் பல புதுமையான நிகழ்ச்சிகளை நடத்தவும், சில நிகழ்ச்சிகளை மதன், யூகிசேது, அனுஹாசன் ஆகியோரும் நடத்த உள்ளனர். பெண்களை கவரும் வகையில் சமையல் வல்லுநர்கள் நடத்த உள்ள சமையல் சாம்பியன் நிகழ்ச்சி உள்ளிட்ட பல புதுமைகளை ஜெயா டி.வி., நடத்த திட்டமிட்டுள்ளது.




