லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் தமிழில் மூட்டை கட்டிய காஜல் | பிளாஷ்பேக்: அப்பாவின் நண்பருக்காக மேடையில் ஆடிய சிறுவன் கமல் | ‛3BHK' படத்தின் மூன்று நாள் வசூல் வெளியானது | அஜித் தோவல் வேடத்தில் மாதவன் | திருமணம் குறித்து ஸ்ருதிஹாசன் சொன்ன பதில் | விஷ்ணு விஷால் மகளுக்கு ‛மிரா' என பெயர் சூட்டிய அமீர்கான் | என்னது நான் ஹீரோவா... : டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் மறுப்பு | மாமன் படத்தை பின்பற்றும் '3BHK' | கல்லூரிகளில் படத்தை புரொமோஷன் செய்ய விருப்பமில்லை : சசிகுமார் |
ஜெயா டிவியில் ஒளிபரப்பான ஜாக்பாட் நிகழ்ச்சியை நடத்தி பிரபலமான குஷ்பு அதன்பிறகு அதே சேனலில் ஒளிபரப்பான பல தொடர்களில் நடித்தார். அதையடுத்து ஜீ தமிழ், வேந்தர் போன்ற சேனல்களில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், தற்போது முதன்முறையாக அவர் சன் டிவிக்குள் ஒரு சரித்திர தொடர் தயாரித்து வருகிறார்.
ஆனால் குஷ்பு அந்த சேனலுக்குள் வருவதை அடுத்து, பல ஆண்டுகளாக அதே சேனலில் தான் நடித்த தொடர்களை ஒளிபரப்பி வந்த ராதிகா அங்கிருந்து வெளியேறுகிறாராம். அப்படி செல்பவர், ஜெயா டிவியில் ஒரு டாக்ஷோ நடத்தப் போகிறாராம். அதையடுத்து, மெகா சீரியலும் தனது ரடான் டிவி மூலமாக தயாரித்து ஜெயா டிவியில் ஒளிபரப்புகிறாராம். சன் டிவி ராதிகாவுக்கு கொடுத்திருந்த அதே நேரத்தை ஜெயா டிவியும் வழங்க முன்வந்துள்ளதாம்.