சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |
திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த நடிகை நவ்யா நாயர், சின்னத்திரை நிகழ்ச்சியொன்றிற்கு நடுவராக பணியாற்ற உள்ளார். திருமணமாகி, ஒரு குழந்தைக்கு தாயாகி விட்ட நடிகை நவ்யா நாயர், சினிமாவில் நடிப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக இருந்தாலும், சின்னத்திரை வாய்ப்பு ஒன்று வாயிற்கதவை தட்டியதால் அதனை ஒப்புக் கொண்டிருக்கிறார். ஏசியாநெட் டி.வி.,யில் ஒளிபரப்பாக உள்ள, மன்ச் டான்ஸ் டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சியில் அவர் நடுவராக பணியாற்றவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இன்னொரு நடுவராக நடிகரும், நடனக் கலைஞருமான அரவிந்த் பணியாற்றவுள்ளார்.
இந்த நடன நிகழ்ச்சி சிறுவர்களுக்கானது. 10 பேர் இதில் போட்டியாளர்களாக பங்கேற்கின்றனர். வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு இது ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா சமீபத்தில் நடந்தது.




