சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |
தமிழ்சினிமாவில் நல்ல நடிகையாக ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்களின் பாராட்டைப் பெற்ற தேவயானி, சில சின்னத்திரை தொடர்கள் மூலம் மேலும் புகழின் உச்சிக்கே சென்றார். வண்ணத்திரை, சின்னத்திரை இரண்டிலும் பெரும் புகழை பெற்றிருக்கும் தேவயானி, ஆர்.கே.விஷன் என்ற சொந்த நிறுவனம் ஒன்றை தனது கணவர் பெயரில் துவக்கி கொடிமுல்லை என்ற தொடரை வெற்றிகரமான தொடராக்கி வெற்றி பெற்றிருக்கிறார்.
ராஜ் டி.வி.யில் வெளியாகிக் கொண்டிருக்கும் கொடிமுல்லைத் தொடரில் அம்மா - மகள் என்று இரட்டை வேடமேற்று கலக்கி வருகிறார். அம்மா வேடத்துக்கான மேக்கப் போடுவதற்கு இரண்டு மணிநேரம் ஆகிறது. பொறுமையாக இருந்ததால், அந்த கதாபாத்திரத்துக்கு பெருமை பெற்றுத் தரும் என்பதை இந்த ஒரு விஷயத்திலேயே தெரிந்து கொண்டேன். கொடிமுல்லை - 150வது எபிசோடுகளை தொட்டிருக்கிறது எனக்கு பெருமையாக இருக்கிறது என்று கூறுகிறார் தேவயானி.




