சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

தமிழில் அஜித் நடித்த முதல் படமான அமராவதியில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சங்கவி. அந்த வகையில், அஜித்-சங்கவி இருவரும் ஒரே படத்தில் அறிமுகமானவர்கள். அதைத் தொடர்ந்து விஜய்யுடன் ரசிகன், விஷ்ணு போன்ற படங்களில் நடித்த சங்கவி, பின்னர் தொடர்ச்சியாக தென்னிந்திய படங்கள் மற்றும் இந்தி படங்களிலும் நடித்தார். அதோடு, கோகுலத்தில் சீதை, சாவித்ரி, கால பைரவா போன்ற சீரியல்களிலும் நடித்தார்.
இந்நிலையில், 2016 பிப்ரவரியில் வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட சங்கவி, தற்போது கொளஞ்சி என்ற படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், ஜெயா டிவிக்காக தயாரிக்கப்பட்டு வரும் பாசம் என்ற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார் சங்கவி. இதில் அவருக்கு இன்ஸ்பெக்டர் வேடம். பெண்களுக்கு சமூகத்தில் இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் அதிரடியான கதாபாத்திரத்தில் நடிக்கும் அவர், சீரியல் முழுக்க காக்கி சட்டை அணிந்து மிடுக்காக நடிக்கிறாராம். கடந்த 15 நாட்களாக பாசம் தொடரின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் இந்த தொடர் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது.




