எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் | உங்களை ஏமாற்ற மாட்டேன் லாலேட்டா : மோகன்லால் மகளை அறிமுகப்படுத்தும் இயக்குனர் உறுதி | சினிமாவில் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை: கிரேஸ் ஆண்டனி | சுரேஷ் கோபி பட சென்சார் விவகாரம் : சனிக்கிழமை படம் பார்க்கும் நீதிபதி | கவுதம் ராம் கார்த்திக் படத்தில் இணையும் பிரபலங்கள் | மீண்டும் ஒரு லெஸ்பியன் படம் | வரி உயர்வு : ஆகஸ்ட் முதல் படங்களை வெளியிடப் போவதில்லை : புதுச்சேரி விநியோகஸ்தர்கள் அறிவிப்பு | இங்கே ஹோம்லி, அங்கே கவர்ச்சி : ராஷ்மிகாவின் அடடே பாலிசி | பிளாஷ்பேக்: வசுந்தரா தாசை நிராகரித்த மணிரத்னம் |
சின்னத்திரையில் நடன நிகழ்ச்சியை துவக்கி வைத்தது விஜய் டி.வி. சினிமா ஸ்டூடியோக்களில் பிரமாண்ட செட் போட்டு அங்கு நடன கலைஞர்களை வரவழைத்து நடன போட்டிகள் நடத்தி, வெற்றி பெறுகிறவர்களுக்கு கணிசமான பரிசு தொகைகளை வழங்குவார்கள். 'அடுத்த பிரபு தேவா யார்', 'மானாட மயிலாட' போன்ற நிகழ்ச்சிகள் உச்சம் தொட்டது,
இதுபோன்ற நிகழ்ச்சிகளை கிராமத்து மக்கள் பார்க்கத்தான் முடியுமே தவிர பங்கேற்க முடியாது. ஆனால் இப்போதும் அதற்கு ஒரு வழிபிறந்திருக்கிறது. நம்ம ஊர் ஆட்டம் என்ற பெயரில் பெப்ர்ஸ் டி.வி ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. ஒரு கிராமத்தை தேர்வு செய்து ஆட்ட களம் அமைக்கப்படும். அக்கம் பக்கத்து ஊரில் இருந்து நடனம் ஆடத் தெரிந்தவர்களை வரவழைத்து ஆட வைக்கப்படும், அதில் சிறந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும். 5 போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியை சவால்ராமுடன் இணைந்து ரியா தொகுத்து வழங்குகிறார். நடன இயக்குனர் ரவிதேவ் நடுவராக பணியாற்றுகிறார். இந்த நிகழ்ச்சிக்கு கிராம மக்களிடையே பெரும் ஆதரவு இருக்கிறது. விரைவில் இதனை பெரிய அளவில் நடத்தவும் முடிவு செய்திருக்கிறார்கள்.