சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |
கலைஞர் தொலைக்காட்சியின் நம்பர் ஒன் நிகழ்ச்சியான மானாட மயிலாட பகுதி 6ல் சிறந்த ஜோடிக்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக கிடைத்துள்ளது. ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகி வந்த மானாட... மயிலாட... 6ம் பகுதியின் இறுதிப்போட்டி சமீபத்திலங் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் சிறந்த ஜோடியை தேர்வு செய்யும் பொறுப்பு பார்வையாளர்களுக்கே வழங்கப்பட்டிருந்தது. அவர்கள், எஸ்.எம்.எஸ் மூலமாக தங்கள் ஓட்டுக்களைப் பதிவு செய்தனர். அவர்கள் தேர்வு செய்த சத்யா - மோனிகா ஜோடி, அதிக வாக்குகளை பெற்று முதல் பரிசு ரூ.20 லட்சம் மதிப்புள்ள இரண்டு வீடுகளை ஆளுக்கொன்றாக தட்டி சென்றார்கள்.
இரண்டாவது பரிசு ரூ.5 லட்சம் ஆசிப் - பாவனா ஜோடிக்கும், மூன்றாம் பரிசான ரூ.3 லட்சம் கார்த்திக் - சவுந்தர்யா ஜோடிக்கும் கிடைத்தது. ஆறுதல் பரிசாக, தேர்வு பெற்ற கிரிஷ் - சுனிதா ஆளுக்கொரு எல்.சி.டி, மற்றும் டி.வி.டி பெற்றுக்கொண்டார்கள். பரிசுகளை நடிகர் தனுஷ் வழங்கினார்.




