இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
கலைஞர் டி.வியில் தி.மு.கழக தலைவர் கருணாநிதியின் கதை, திரைக்கதை வசனத்தில் தொடர்ந்து சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. 'ராமானுஜர்' தொடரை அடுத்து 'ரோமாபுரி பாண்டியன்' ஒளிபரப்பானது. இதனை குட்டிபத்மினி தயாரித்தார். தனுஷ் இயக்கினார். 2014ம் ஆண்டு ஒளிபரப்பை துவக்கி 2016 ஏப்ரலில் முடிந்தது. மொத்தம் 543 எபிசோட்கள் ஒளிபரப்பானது.
தற்போது கருணாநிதி எழுதிய 'தென்பாண்டி சிங்கம்' நாவலை சீரியலாக ஒளிபரப்ப இருக்கிறார்கள். இதற்கான திரைக்கதை அமைக்கும் பணி முடிவடைந்திருக்கிறது. நடிகர், நடிகைகள் தேர்வும் மும்முரமாக நடந்து வருகிறது. இதையும் தனுஷ் இயக்கலாம் என்று தெரிகிறது. பிரமாண்ட செட்டுகள் போடவும் ஏற்பாடு நடந்து வருகிறது. இதுபற்றிய முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.