பிளாஷ்பேக்: 200 படங்களில் ஒரேஒரு படத்தில் மட்டும் ஹீரோயினாக நடித்தவர் | அரசன் படத்தில் சிம்பு ஜோடி யார் | வேல்ஸ் வசமான ஈவிபி : புதிய பிலிம் சிட்டியை திறந்து வைக்கும் நிர்மலா சீதாராமன் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த ராஜேஷ் | எம்.எஸ்.பாஸ்கர் படத்தின் மூலம் இயக்குனர் ஆன ப்ராங்க் ஸ்டார் ராகுல் | ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் படங்கள், தொடர்கள் அறிவிப்பு | கடன் பிரச்னை இருந்தாலும் நிம்மதியாக தூங்குகிறேன்: சேரன் பேச்சு | 100 முறை ஆர்ஆர்ஆர் பார்த்தேன் : ராம்சரணின் வீட்டிற்கே வந்து நெகிழ்ந்த ஜப்பான் ரசிகை | நடிகை ஹேமா மீதான போதைப்பொருள் வழக்கு ரத்து | படம் ரிலீஸ் : சிறையில் இருந்தபடி ரசிகர்களுக்கு நடிகர் தர்ஷன் கோரிக்கை |

ஹாலிவுட் போர்னோகிராபிக் ஸ்டாரான சன்னி லியோன் எம்.டிவி நடத்திய 'ஸ்பிலிட்ஸ் வில்லா' நிகழ்ச்சியின் மூலமாக இந்தியா வந்தார். அதன் பிறகு பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். எந்த நிகழ்ச்சி மூலம் இந்தியாவுக்குள் வந்தாரோ, தற்போது அதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
'ஸ்பிலிட்ஸ் வில்லா' நிகழ்ச்சியின் 9வது சீசன் இப்போது பரபரப்புடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்தியாவில் இளைஞர்கள் அதிகம் பார்க்கும் நிகழ்ச்சியாக இது மாறியிருக்கிறது. அதற்கு சன்னி லியோனின் ஆடைகளும், கமெண்டுகளும் தான் என்கிறார்கள். அதோடு சக தொகுப்பாளரான ரான்விஜய் அழகை அவர் புகழ்வதும், அவரை கலாய்ப்பதும், நிகழ்ச்சியில் தவறு செய்கிறவர்களை கெட்ட வார்த்தை சொல்லி திட்டுவதுமாக நிகழ்ச்சியை கலகலப்பாக்கி விடுகிறார், நிகழ்சியில் ஏ ஜோக்குகளுக்கு பஞ்சம் இல்லை. தாராள கவர்ச்சி இருக்கு, கொஞ்சம் செண்டிமெண்டும் இருக்கு. இப்படி பலவித அம்சங்களோடு நிகழ்ச்சி களை கட்டி வருகிறது. இதனால் சன்னி லியோனின் சம்பளமும் எகிறி இருக்கிறது. 10 வது சீசனையும் சன்னியே தொகுத்து வழங்குவார் என்பது சேனல் வட்டாரத் தகவல்.