பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் | விவாகரத்து ஆனவர்களுடன் கனிவோடு இருங்கள் : மீரா வாசுதேவன் | தாடி பாலாஜிக்கு 1 லட்சம் மருத்துவ உதவி: தயாரிப்பாளர் வழங்கினார் | பிளாஷ்பேக்: 200 படங்களில் ஒரேஒரு படத்தில் மட்டும் ஹீரோயினாக நடித்தவர் | அரசன் படத்தில் சிம்பு ஜோடி யார் | வேல்ஸ் வசமான ஈவிபி : புதிய பிலிம் சிட்டியை திறந்து வைக்கும் நிர்மலா சீதாராமன் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த ராஜேஷ் | எம்.எஸ்.பாஸ்கர் படத்தின் மூலம் இயக்குனர் ஆன ப்ராங்க் ஸ்டார் ராகுல் | ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் படங்கள், தொடர்கள் அறிவிப்பு | கடன் பிரச்னை இருந்தாலும் நிம்மதியாக தூங்குகிறேன்: சேரன் பேச்சு |

சுதா சந்திரன் நடித்த இந்தி சீரியல் நாகின். கலர்ஸ் டி.வியில் கடந்த ஆண்டு ஒளிப்பரப்பான இந்த தொடர் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த தொடரை சத்ரம் வர்மா, சாந்தினி, நீரஜ், லலித் மரத்தா, ராகேஷ் சவுத்ரி ஆகியோர் இயக்கி இருந்தனர். சுதாசந்திரனுடன் அர்ஜுன் பிஜ்லானி, மவுனிராய், அதா கான் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். ஷோபா கபூர், ஏக்தா கபூர் தயாரித்திருந்தார்கள்.
இது நினைத்த உருவத்தை எடுக்கும் இச்சாதாரி பாம்பின் கதை. சிவன்யா, சோஹா என்ற இரண்டு பாம்புகளில் ஒன்று நல்லது செய்யக்கூடியது. இன்னொன்று கொடுமையானது. இந்த இரண்டு பாம்புகளும் ஒரு குடும்பத்திற்குள் புகுந்து கொண்டு ஆடும் ஆட்டமே கதை. செண்டிமெண்ட் மாயாஜாலம், அதிரடி திருப்பம், பிரமாண்ட அரங்க அமைப்பு என ஒரு சினிமாவுக்கான அனைத்து அம்சங்களும் கொண்ட தொடர்.
ஏற்கெனவே ஜீ தமிழ் சேனலில் ஒரு பாம்பு கதையை மையமாக கொண்ட 'நாகராணி' தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவும் இந்தி டப்பிங் சீரியல்தான். அதற்கு போட்டியாக நாகின் தொடரை மற்றொரு முன்னணி சேனல் ஒளிப்பரப்ப இருக்கிறது.