'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
1997 முதல் 2005 வரை தூர்தர்ஷினில் சக்கைபோடு போட்ட தொடர் சக்தி மான். ஞாயிற்றுகிழமை 12 மணிக்கு ரோட்டில் குழந்தைகளையே காண முடியாது. அந்த அளவிற்கு அந்த சீரியலில் தங்களை பறிகொடுத்து நின்றார்கள். சக்திமான் உடைகள், சக்திமான் பொம்பைகள் என அதைச் சுற்றி வியாபாரங்களும் நடந்தது. சக்திமான் போன்று மாடியிலிருந்து குதித்து உயிர்விட்ட குழுந்தைகளும் உண்டு. அந்த அளவிற்கு சக்தி மிகுந்ததா இருந்தது சக்திமான் தொடர்.
500 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பான சக்திமான் தொடர் நிறுத்தப்பட்டு 15 வருடங்களுக்கு மேலாகியும் அந்த குழந்தைதனமான முகம் கொண்ட முகேஷ் கண்ணாவை யாராலும் மறக்க முடியாது. அவருக்கு இப்போது 57 வயதாகிறது. அவர்தான் சக்திமான் தொடரை மீண்டும் ஆரம்பிக போவதாக அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சக்திமானை இன்னும் மக்கள் மறக்கவில்லை. பழைய மாதிரி என்னாலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால் மீண்டும் சக்திமானாக மாற முடிவு செய்திருக்கிறேன். புதிய தொடர், சக்திமான் கதை விட்ட இடத்திலிருந்து தொடங்கும், அதே குழந்தை குறும்புகளும் இருக்கும். இப்போது வளர்ந்துள்ள டெக்னாலஜியை பயன்படுத்தி இன்னும் சிறப்பாக கொண்டு வர முடியும். இதற்காக டிடி சேனலில் மாலை 5 மணி சிலாட் கேட்டிருக்கிறேன். சோனி, கலர்ஸ், சேனல்களிடமும் பேசி வருகிறேன். என்கிறார் முகேஷ்.