நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
சி.ஜே.பாஸ்கர் இயக்கி வந்த தொடர் ஆதிரா. சின்னத்திரைகளில் ஒளிபரப்பான சீரியல்களில் இந்த சீரியல் நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஸ்ரீவாணி, அஞ்சுஅரவிந்த், ஜெய்தனுஷ், அம்பிகா மோகன் உள்பட பலர் நடித்தனர். இந்த தொடரில் பெரும்பகுதி படப்பிடிப்பு கேரளாவில் உள்ள காட்டுப்பகுதியில்தான் படமாக்கப்பட்டு வந்தது. அதனால் சினிமா படப்பிடிப்புகளுக்கு அவுட் டோரில் முகாமிடுவது போன்று இந்த ஆதிரா தொடருக்காக கேரளாவில் முகாமிட்டு படப்பிடிப்பு நடத்தி வந்தார் சி.ஜே.பாஸ்கர்.
ஆனால் தற்போது 250 எபிசோடுகள் வரை ஒளிபரப்பாகியுள்ள ஆதிரா தொடர் இன்னும் ஓராண்டு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இம்மாதம் 24-ந்தேதியோடு ஆதிரா தொடர் நிறைவு பெறுவதாக கூறுகிறார்கள். அதை யடுத்து அந்த சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தில் இந்தியில் பெரிய அளவில் நேயர்களின் வரவேற்பை பெற்ற ஒரு டப்பிங் நெடுந்தொடர் ஒளிபரப்பாகிறதாம்.