புகை பிடித்தல் மற்றும் மதுவுக்கு எதிரான வாசகங்கள் படம் பார்க்கும் மூடை கெடுக்கிறது : அனுராக் காஷ்யப் | வசூல் சண்டையை ஆரம்பித்த 'ஹிட் 3' : பதிலடி கொடுத்த 'ரெட்ரோ' | சிம்பு, சந்தானம் இணையும் படம் நாளை படப்பூஜை | டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் யார் தெரியுமா? | விராட் கோலியாக எஸ்டிஆர், அனுஷ்கா சர்மாவாக திரிஷா? | மீண்டும் ரஜினி, சுந்தர்.சி கூட்டணி? | பல ஆண்டுகளுக்குபின் பேட்டி கொடுத்த விஜய், அஜித் : இந்த மாற்றம் தொடருமா? | ரூ.100 கோடியை தொடுமா ரெட்ரோ? | தொடரும் இயக்குனர் இயக்கத்தில் பஹத் பாசில் | பிளாஷ்பேக் : வில்லன் இமேஜை உடைத்து காட்டுவோம்: கார்த்திக்குடன் டீல் பேசிய ஏவிஎம் |
மியூசிக் சேனலின் நட்சத்திர தொகுப்பாளினி தியா மேனன். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. சேலத்தைச் சேர்ந்த கார்த்திக் தான் மணமகன். கார்த்திக் தற்போது சிங்கப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக இருக்கிறார். அங்குள்ள இண்டோர் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும், ஆபரேஷன் மானேஜராகவும் இருக்கிறார். இது காதல் திருமணம்.
தியா ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் கோவையில் உள்ள பெற்றோரை பார்க்க செல்வராம். அப்போது ஒரு பிறந்த நாளுக்கு நண்பர்களுடன் அறிமுகமானவர் கார்த்திக். அறிமுகம் நட்பாகி பின்பு அதுவே காதலாகிவிட்டது. காதல் விவரம் பெற்றவர்களுக்கு தெரிந்ததும். இரு குடும்பத்தினரும் கலந்து பேசி திருமணத்திற்கு ஓகே சொல்லி நிச்சயதார்த்தமும் முடிந்து விட்டது. ஆகஸ்ட்டில் திருமணம் நடக்க இருக்கிறது. திருமணம் முடிந்ததும் கணவருடன் சிங்கப்பூர் பறக்கிறார் தியா.