விராட் கோலியாக எஸ்டிஆர், அனுஷ்கா சர்மாவாக திரிஷா? | மீண்டும் ரஜினி, சுந்தர்.சி கூட்டணி? | பல ஆண்டுகளுக்குபின் பேட்டி கொடுத்த விஜய், அஜித் : இந்த மாற்றம் தொடருமா? | ரூ.100 கோடியை தொடுமா ரெட்ரோ? | தொடரும் இயக்குனர் இயக்கத்தில் பஹத் பாசில் | பிளாஷ்பேக் : வில்லன் இமேஜை உடைத்து காட்டுவோம்: கார்த்திக்குடன் டீல் பேசிய ஏவிஎம் | மாலத்தீவில் பார்வதி நாயர் ஹனிமூன் கொண்டாட்டம் | 'கயல்' அமுதா தற்கொலை முயற்சி? | பிளாஷ்பேக் : கவனிக்கப்பட்டாத 'திருமழிசை ஆழ்வார்' | ஹிட் 3 : முதல் நாள் வசூல் 43 கோடி |
ஜீ தமிழ் சேனல் விரைவில் அதி நவீன அதிரடி நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கிறது. மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் கில்லாடிகள் என்பது அதன் டைட்டில் ஜோடிப் பொருத்தம் மாதிரியான நிகழ்ச்சியை புதிய யுக்தியுடன் பல அதிரடியான புதிய அம்சங்களுடன் தயாரிக்கிறார்கள்.
இதில் பத்து ஜோடிகள் கலந்து கொள்கிறார்கள். காதல் இருக்கும், ரெமான்ஸ் இருக்கும், கேள்விகள் இருக்கும், எல்லாவற்றிலும் ஒருவர் மீது இருக்கும் அன்பை மற்றவர் வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். யாருடை காதல் அழுத்தமானதோ அவர்களே வெற்றியாளர்கள். பத்து ஜோடிகளும் செலிபிரிட்டிகள்தான். திருமணமானவர்களாகவும் இருக்கலாம். காதலர்களாகவும் இருக்கலாம்.
இவனுக்கு தண்ணியில கண்டம் படத்தின் மூலம் சினிமாவில் எண்ட்ரி கொடுத்த தீபக் இப்போது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் புரமோசனை ஒரு திரைப்படத்திற்கான புரமோசன் போன்று பிரமாண்டமாக வெளியிட்டிருக்கிறார்கள். முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.