இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
மாஜி நாயகியான நளினி, 2000-ம் வருடத்தில் கிருஷ்ணதாசி என்ற தொடரில் சீரியலுக்கு வந்தவர் கடந்த 16 ஆண்டுகளில் சுமார் 20 மெகா சீரியல்களில் நடித்து விட்டார். இப்போது சின்ன பாப்பா பெரிய பாப்பாவில் நடித்து வருகிறார். அதோடு, தெலுங்கில் அம்மா நா கோடலா -என்ற தொடரில் கஞ்சத்தனம் மிகுந்த மாமியாராக நடித்து வருகிறார். இந்த சீரியல் ஆந்திராவில் தற்போது பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறதாம். அதனால் தெலுங்கு சினிமாவிலும் நளினிக்கு வாய்ப்புகள் குவிகிறதாம். விளைவு, சென்னையில் இருந்து இடம்பெயர்ந்து ஐதராபாத்தில் அவர் குடியேறி விட்டார். சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலுக்காக மட்டுமே சென்னை வந்து செல்கிறார்.
மேலும், நளினிக்கு யூனிட் சாப்பாட்டைவிட வீட்டு சமையல்தான் ரொம்ப பிடிக்குமாம். அதிலும் விதவிதமான சமையல்களை சமைப்பதில் அவர் கைதேர்ந்தவராம். அதனால் படப்பிடிப்பு இல்லாமல் தான் வீட்டில் இருக்கும் நாட்களில் விரும்பிய உணவுகளை அவரே சமைத்து சாப்பிடுவாராம். வீட்டு நபர்களுக்கும் சமைத்துக்கொடுத்து அசத்துவாராம். அதோடு, தெலுங்கு சீரியல், சினிமாக்களில் நடிக்க செல்லும்போது அவருக்கு மதிய வேளைகளில் வீட்டு சமையலே வந்து விடுமாம். அதைத்தான் அருகில் இருப்பவர்களுக்கும் கொடுத்து தானும் ருசித்து சாப்பிடுவாராம் நளினி.