பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

விஜய் டி.வி நடத்திய சூப்பர் சிங்கர் 5வது சீசனின் இறுதி போட்டிகள் சமீபத்தில் நடந்தது. இதில் அரவிந்தாக்ஷன் சூப்பர் சிங்கர் டைட்டில் வென்றதுடன் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டையும் பரிசாக பெற்றுள்ளார். தற்போது அரவிந்தாக்ஷனுக்கு முதல் பரிசு கொடுத்தது தவறு, அவர் சினிமா பின்னணி பாடகர், கைதேர்ந்த பாடகருடன் அறிமுக பாடகர்களை போட்டியிடச் சொன்னது எந்தவிதத்தில் நியாயம், சூப்பர் சிங்கர் பாடல் போட்டியில் ஒரு தொழில்முறை பாடகர் எப்படி கலந்து கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பினர். மேலும் ஃபரீதாவுக்கு தான் முதல்பரிசு கொடுத்திருக்க வேண்டும், விஜய் டிவி தொடர்ந்து ஒருவருக்கு சாதகமாக செயல்படுகிறது என்றெல்லாம் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தது.
இதுகுறித்து விஜய் டி.வியின் தலைமை நிர்வாக அதிகாரி பிரதீப் மில்ராய் பீட்டர் அளித்துள்ள விளக்கம் வருமாறு:
சூப்பர் சிங்கர் போட்டியின் விதிமுறையில் திரைப்பட பாடகர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்கிற விதிமுறை எதுவும் இல்லை. முன்பு இருந்தது உண்மைதான். நிகழ்ச்சியின் தரத்தை உயர்த்த இப்போது அதை நீக்கி விட்டோம். நிகழ்ச்சின் முன்னோட்டத்தில் புதிய குரல் தேடல் என்று சொல்லவில்லை, செல்லக்குரல் தேடல் என்றுதான் கூறியிருந்தோம். சீசனுக்குள் வந்துவிட்டால் அது முடியும் வரை வெளியில் பாடக்கூடாது என்றுதான் விதிமுறை வைத்துள்ளோம் என்கிறார் பிரதீப்.
“சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கான விதியை வகுப்பதும், மாற்றி அமைப்பதும் அந்த சேனலின் உரிமை. இதனை முதலிலேயே அறிவித்திருந்தால் சினிமாவில் சில பாடல்கள் மட்டும் பாடிவிட்டு அடுத்து வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் பாடகர்கள் பங்கேற்றிருப்பார்கள். அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்குமே” என்ற விமர்சனம் எழுந்துள்ளது.