இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
சின்னத்திரையில் தொகுப்பாளர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என இரண்டு முகம் காட்டி வருபவர் டிஎஸ்கே. தற்போது குறும்படங்கள் இயக்கி வரும் அவர், இசை ஆல்பங்களையும் பாடி வெளியிட்டு வருகிறார். அதோடு, விரைவில் ஆன்லைனில் ஒரு சீரியலை இயக்கி வெளியிடப்போவதாகவும் சொல்கிறார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
பிரபல சேனலில் ஜோக்கடி, சும்மா பாடுங்கஜி உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த நான், தற்போது தல தளபதி, இப்படி செய்வீங்கன்னு எதிர்பார்க்கல்லே உள்பட சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பங்கேற்று வருகிறேன். அதோடு சுட்டி டிவியில் ஜாக்கிசான் தொடரில் 7 கேரக்டர்களுக்கு குரல் கொடுத்தும் வருகிறேன். மேலும், புறம்போக்கு, காவல் படங்களைத் தொடர்ந்து அட்டக்கத்தி தினேசுடன் வாராயோ வெண்ணிலாவே மற்றும் சுமோ உள்பட மேலும் பெயரிடப்படாத 2 படங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்து வருகிறேன்.
அதோடு, டிஎஸ்கே எண்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனத்தின் மூலம் நிறைய ஆல்பங்களை பாடி வெளியிட்டு வருகிறேன். எனக்கு பிரச்னை, சூர்யா ஜோதிகா போன்ற ஆல்பங்களை முன்பு வெளியிட்ட நான், தற்போது டிஎஸ்கே ஆன்தம், எங்க வீட்டு பிள்ளை, தே, சிரித்து பேசும் -என பல ஆல்பங்களில் பாடியிருக்கிறேன். இந்த ஆல்பங்களை யூ டியூப்பில் வெளியிட்டிருக்கிறேன். இதில், எனக்கு பிரச்சினை -என்ற ஆல்பத்தை சிவகார்த்திகேயன்- விஜயசேதுபதி ஆகியோர் சேர்ந்து வெளியிட்டனர்.
இதுதவிர சினிமாவில், நீ என்ன மாயம் செய்தாய் என்ற படத்தில் ஏர்டெல் சிங்கர் மாளவிகாவுடன் இணைந்து டேவிட் பரத் இசையில் ஆசை வச்சிக்கிட்டு பேசாத நெஞ்சுக்குள்ள -என்ற பாடலில் பின்னணி பாடியிருக்கிறேன். இந்நிலையில், விரைவில், ஒரு சீரியல் தயாரித்து நடித்து அதை ஆன்லைனில் வெளியிடப்போகிறேன். அதற்கான வேலைகள் தற்போது துரிதமாக நடந்து கொண்டி ருக்கிறது என்று கூறும் டிஎஸ்கே, எதிர்காலத்தில் சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கமே. அதற்காகதான் என்னை தயார்படுத்திக்கொண்டு வருகிறேன் என்கிறார்.