இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
சின்னத்திரை சீரியல் நடிகை ரம்யா. தற்போது ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து வருகிறார். இதுதவிர பெப்பர்ஸ் சேனலில் சாட் வித் ரம்யா என்ற நிகழ்ச்சியை கடந்த 2 வருடங்களுக்கு மேலாக நடத்தி வருகிறார். சீரியல் நடிகை என்பதை விட இந்த நிகழ்ச்சி மூலம்தான் ரம்யா அதிக புகழ் அடைந்திருக்கிறார். பெண்களுக்கான பிரச்சினைகளை கேட்டு அதற்கான தீர்வையும் சொல்வதால் பெண்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சியாகவும், சேனலின் நட்சத்திர நிகழ்ச்சியாகவும் ஆகியிருக்கிறது.
ரம்யா பி.ஏ சோசியாலஜி மற்றும் சைக்காலஜி படித்திருப்பதால் பல விஷயங்களுக்கு அவரால் எளிதான தீர்வை சொல்ல முடிகிறது. ரம்யாவின் நிகழ்ச்சியால் கவரப்பட்ட வெளிநாடு வாழ் பெண்கள் இணைந்து ரம்யா பேன் கிளப்பை ஆன்லைனில் தொடங்கியிருக்கிறார்கள். அதில் பெண்களுக்கு தேவையான விஷயங்களை பதிவிட்டு வருகிறார்கள்.
பாலுமகேந்திரா இயக்கிய தலைமுறைகள் படத்தில் நடித்துள்ள ரம்யாவுக்கு ஒரு படம் இயக்க வேண்டும் என்பது கனவு. அதோடு ஒரு கவுன்சிலிங் மையம் திறக்கவும் திட்டமிட்டிருக்கிறார். ஜவுளி கடைகள், பியூட்டி பார்லர்கள் திறக்கும் நடிகைகள் மத்தியில் ரம்யா வித்தியாசமாக யோசிக்கிறார்.