மீண்டும் ரஜினி, சுந்தர்.சி கூட்டணி? | பல ஆண்டுகளுக்குபின் பேட்டி கொடுத்த விஜய், அஜித் : இந்த மாற்றம் தொடருமா? | ரூ.100 கோடியை தொடுமா ரெட்ரோ? | தொடரும் இயக்குனர் இயக்கத்தில் பஹத் பாசில் | பிளாஷ்பேக் : வில்லன் இமேஜை உடைத்து காட்டுவோம்: கார்த்திக்குடன் டீல் பேசிய ஏவிஎம் | மாலத்தீவில் பார்வதி நாயர் ஹனிமூன் கொண்டாட்டம் | 'கயல்' அமுதா தற்கொலை முயற்சி? | பிளாஷ்பேக் : கவனிக்கப்பட்டாத 'திருமழிசை ஆழ்வார்' | ஹிட் 3 : முதல் நாள் வசூல் 43 கோடி | வசூலில் வெற்றி பெற்றதா டூரிஸ்ட் பேமிலி |
வடிவேலு கூட்டணியில் கிட்டத்தட்ட 18 படங்களில் காமெடியனாக நடித்திருப்பவர் டெலிபோன் ராஜ். அந்த வகையில், 'சாருக்கு ஒரு ஊத்தப்பம்' என்று சொல்லும் காமெடி இப்போதுவரை பேசப்பட்டு வருகிறது. அதேபோல், இம்சை அரசன் 23ஆம் புலிகேசியில், ராஜாதி ராஜா ராஜ கம்பீர -என்று பேசும் வசனத்தில் குலோத்துங்கவை விட்டு விடும் காமெடி, வாத்தியார் படத்தில் செருப்ப கொடுத்துறுவானா அவன், கொடுத்தா செருப்பாலே அடிப்பேன் என்ற காமெடி, கம்பீரம் படத்தில் இறந்தவரை கொண்டு வரும் காரில் டிராபிக் போலீசான வடிவேலுவையும் ஏற்றி வரும் காட்சி இப்படி வடிவேலுவுடன் டெலிபோன் ராஜ் இணைந்து நடித்த பல சூப்பர் ஹிட் காமெடி காட்சிகள் இப்போதுவரை சேனல்களில் ஒளிபரப்பாகி வருகின்றன.
அந்த வகையில், இப்போது பல படங்களில் அவர் காமெடியனாக நடித்துக்கொண்டு வருகிறார். அந்த படங்கள் பற்றி டெலிபோன் ராஜ் கூறுகையில், தற்போது நான் ரயில், ஜெயிக்கிற குதிரை, வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்கய்யா, லவ்குரு, மியாவ், மல்லி, முப்பரிமாணம் உள்பட 10 படங்களில் தற்போது நடித்து வருகிறேன். இதில், மியாவ் படத்தில் ஷோலோ காமெடியனாக நடித்திருக்கிறேன். நான் சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட் என்பதோடு குறைந்த சம்பளத்திலும் நடிக்கிறேன். இந்த விசயம் கோலிவுட்டில் பரவியதை அடுத்து வேகவேகமாக புதிய படங்கள் புக்காகி வருகின்றன.
இதில் சின்னாஸ் பழனிச்சாமி இயக்கியுள்ள மியாவ் படத்தில் காமெடி போலீசாக நடித்துள்ளேன். எனக்கு பல முக்கியத்துவமுள்ள காட்சிகளும் உள்ளது. பிளாக்தண்டர் ஓனர் அடக்கலராஜ் இநத படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ள பூனை ஒரு காட்சியில் என்னை துரத்தி வந்து எனது யூனிபார்மையெல்லாம் கழற்றி ஓடஓட விரட்டி விடும். மேலும், ஒரு காட்சியில் என்னையும், சிலரையும் அந்த பூனை ஆட வைக்கும். இதில் ஒரு பூனை பாடும் பாடலும் உள்ளது. அந்த பாடல் முழுக்க நானும் நடனமாடியிருக்கிறேன். இந்த படம் திரைக்கு வரும்போது அந்த பாடல் பெரிய அளவில் ரீச்சாகும்.
அதோடு பூனை பல படங்களில் நடித்திருந்தபோதும் முழுக்க முழுக்க பூனையை மையப்படுத்திய படம் இதுவாகத்தான் இருக்கும் என்று கூறும் காமெடி நடிகர் டெலிபோன் ராஜ், மியாவ் படத்தையடுத்து மல்லி படத்தில் பேய்க்கு பயந்த போலீசாக நடித்துள்ளேன். ஒரு இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிளும் பேய்களிடம் சிக்கித்தவிக்கும் வேடம். அடுத்து, சாந்தனு நடிக்கும் முப்பரிமாணம் படத்திலும் காமெடி போலீசாகத்தான் நடித்துள்ளேன். ஆக, காமெடியனான என்னை தற்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் காமெடி போலீசாக்கி விட்டார்கள் என்கிறார் டெலிபோன் ராஜ்.