விராட் கோலியாக எஸ்டிஆர், அனுஷ்கா சர்மாவாக திரிஷா? | மீண்டும் ரஜினி, சுந்தர்.சி கூட்டணி? | பல ஆண்டுகளுக்குபின் பேட்டி கொடுத்த விஜய், அஜித் : இந்த மாற்றம் தொடருமா? | ரூ.100 கோடியை தொடுமா ரெட்ரோ? | தொடரும் இயக்குனர் இயக்கத்தில் பஹத் பாசில் | பிளாஷ்பேக் : வில்லன் இமேஜை உடைத்து காட்டுவோம்: கார்த்திக்குடன் டீல் பேசிய ஏவிஎம் | மாலத்தீவில் பார்வதி நாயர் ஹனிமூன் கொண்டாட்டம் | 'கயல்' அமுதா தற்கொலை முயற்சி? | பிளாஷ்பேக் : கவனிக்கப்பட்டாத 'திருமழிசை ஆழ்வார்' | ஹிட் 3 : முதல் நாள் வசூல் 43 கோடி |
சிலர் நான் மீடியாவுக்கு வந்ததே ஒரு விபத்து மாதிரி என்பார்கள். ஆனால் நான் நிஜத்திலேயே எனக்கு விபத்து ஏற்பட்டதினால்தான் டிவி மீடியாவுக்கே வந்தேன் என்கிறார் நடிகை பத்மா அய்யர்.
தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
எனது சொந்த ஊர் சேலம். அங்கு இருந்தபோது லோக்கல் சேனல்களில் ஆங்கராக ஒர்க் பண்ணினேன். தோல்-ஹேர் சம்பந்தப்பட்ட கிளினிக்கும் நடத்தி வந்தேன். அதனால் சேனல் என்பது ஒரு ஹாபியாகதான் இருந்தது. அந்த சமயத்தில் பல சேனல்களில் ஒளிபரப்பான பல ஷோக்களில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றிருக்கிறேன். அப்போது எனக்கு எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்து காரணமாக என்னால் கிளிக்கை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் 6 மாத ஓய்வுக்கு பிறகு மீண்டும் சேனல்களில் ஆங்கராக வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினேன்.
அந்த வகையில், சிலர் நான் மீடியாவுக்கு வந்தது ஒரு விபத்து மாதிரி என்பார்கள். ஆனால் நான் நிஜத்திலேயே எனக்கு விபத்து ஏற்பட்டதினால்தான் டிவி மீடியாவுக்கே வந்தேன். அதையடுத்து 6 மாத ஓய்வுக்கு பிறகு மீண்டும் ஆங்கராக சில சேனல்களுக்கு சென்று சான்சு கேட்டேன். அப்போது சிலர் உங்கள் வாய்ஸ் நன்றாக உள்ளது. நீங்கள் செய்தி வாசிப்பாளர் ஆகலாம் என்றனர். அதன்பிறகுதான் தமிழன், ராஜ் டிஜிட்டல் சேனல்களில் செய்தி வாசிக்கத் தொடங்கினேன். அப்போது திருமுருகன் இயக்கிய தெரியாமல் ஒரு கொலை என்ற சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்தேன். அதோடு, நிறைய விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறேன்.
இப்படி சென்றுகொண்டிருக்கும்போதுதான் சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆதார், பாலக்காட்டு மாதவன், 49ஓ போன்ற படங்களில் நடித்திருக்கிறேன். தற்போது அமீர் நடித்து வரும் பேரன்பு கொண்ட பெரியோர்களே, சீனி, முத்துராமலிங்கம் என பல படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இந்த படங்கள் திரைக்கு வரும்போது நான் கவனிக்கப் படும் நடிகையாகி விடுவேன்.
மேலும், சீரியல்களில் நடிக்க நல்ல வாய்ப்புகள் வந்தால் நடிக்கும் எண்ணமும் உள்ளது. சிறிய வேடங்களாக இல்லாமல் தொடர்ந்து பயணிக்கக்கூடிய வேடங்கள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று சொல்லும் பத்மா அய்யருக்கு அமானுஷ்யம், திரில்லர் படங்கள் ரொம்ப பிடிக்குமாம். அதனால் பேய் வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதே அவருக்கு ஆசையாக உள்ளதாம். அதோடு, தற்போது தேவதர்ஷினி நடிக்கும் ஒரு பேய் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறாராம் பத்மா அய்யர்.