பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | 'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' |
கருணாநிதியின் வசனத்தில் ரோமாபுரி பாண்டியன், டி.ஆர்.பந்துலுவின் மகள் விஜயலட்சுமி இயக்கும் சந்திரலேகா ஆகிய தொடர்களில் நடித்து வருபவர் மதுரை லோகு. இந்த தொடர்களில் தான் நடித்து வரும் கேரக்டர்கள் பற்றி அவர் கூறுகையில்,
கருணாநிதியின் வசனத்தில் ஒளிபரப்பாகி வரும் ரோமாபுரி பாண்டியன் தொடரில் ஒரு சிப்பாய் வேடத்தில் நடிக்கிறேன். இதில் எனக்கு வசனம் குறைவுதான் என்றாலும், அவர் எழுதிய வசனங்களை பேசி நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். காரணம். அவர் எனக்கு பிடித்தமான தலைவர் என்பதோடு கலைப்பற்று மிக்கவர். சிவாஜிகணேசன் நடித்த பராசக்தி படத்தில் கருணாநிதி எழுதிய வசனங்களை இப்போதுவரை நான் பேசி வருகிறேன். அந்த அளவுக்கு மறக்க முடியாத வசனங்கள். இலக்கிய வாசம் வீசும் வார்த்தை ஜாலங்கள். அதேபோல் அமிர்தம் டைரக்சனில் மு.க.ஸ்டாலின் நடித்த ஒரே ரத்தம் படத்திலும் கலைஞரின் வசனங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
மேலும், சின்னத்திரையில் நடித்துக்கொண்டே சில படங்களிலும் நடிக்கிறேன். ஏற்கனவே குபேர ராசி படத்தில் போலீசாக நடித்த நான், பின்னர் காலக்கூத்து என்ற படத்தில் ஆசிரியர் வேடத்தில் நடித்தேன். இப்போது சந்தானம் நாயகனாக நடித்து வரும் தில்லுக்குத்துட்டு படத்திலும் ஒரு கேரக்டரில் நடிக்கிறேன். பாடலிலும் நடனமாடுகிறேன் என்று கூறும் மதுரை லோகு, இப்படித்தான் இந்தமாதிரிதான் என்றில்லாமல் என்னை நம்பி டைரக்டர்கள் கொடுக்கும் வேடங்கள் எதுவாக இருந்தாலும் நடித்து வருகிறேன். அதோடு எதிர்காலத்தில் இன்னும் வெயிட்டான வேடங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் எனக்கு இருக்கிறது என்கிறார் மதுரை லோகு.