நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | 'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி |
ஆரம்ப காலத்தில் அழுது வடியும் செண்டிமென்ட் வேடங்களில் அதிகமாக நடித்து வந்த நான், இப்போது கொடூர வில்லியாக நடிக்கிறேன். செண்டிமென்ட் வேடங்களை விட இந்த வில்லி வேடங்கள்தான் எனக்கு பெரிய ரீச் கொடுத்துள்ளன என்கிறார் நடிகை சாந்தி ஆனந்த். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
பார்த்திபன் நடித்த சுகமான சுமைகள் படத்தில் தங்கை வேடத்தில் நான் அறிமுகமானேன். அதன்பிறகு கெளரி மனோகரி படத்தில் நாயகியாக நடித்தேன். தொடர்ந்து கோகுலம், டூயட் என் சில படங்களில் நடித்தேன். பின்னர் 1995ல் திருமணமாகி 5 வருடம் பிரேக் ஆகி விட்டது. அதன்பிறகு கே.பாலசந்தர் சார் இயக்கிய சீரியல்கள் மட்டுமின்றி தூர்தர்ஷனில் ஒளிபரப்பான சில சீரியல்களிலும் நடித்தேன். அப்போது, அழுது வடியும் கேரக்டர்களில் அதிகமாக நடித்து வந்த நான், ஆடுகிறான் கண்ணன் என்ற சீரியலில் முதன்முதலாக நெகட்டீவ் ரோலில் நடித்தேன். அந்த சீரியல் எதிர்பார்க்காத ரீச்சைக் கொடுத்தது. அதுவே எனக்கு பிரேக்காக அமைந்தது. அதன்பிறகு, நான் நெகடீவ் ரோலில் நடித்த சீரியல்கள் எல்லாமே என்னை பேச வைத்தன.
தற்போது ராமானுஜர் தொடரில், ராமானுஜரின் மாமியாராக நடித்து வருகிறேன். ஒரு தாய் தனது மகளின் வாழ்க்கையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக சுயநலமாக நடந்து கொள்ளும் கதாபாத்திரம். அதேப்போல் அபூர்வ ராகங்கள் தொடரில் பயங்கர வில்லியாக நடித்து வருகிறேன். போலீஸ்காரனுக்கு அம்மா, ஆனால் எனக்கு கிரிமினல் புத்தி. மகன் தூண்டி விடுவதால் அந்த மாதிரி செயல்படுவேன். என் இனிய தோழியே தொடரில் ஒரு சாப்ட் அம்மாவாக நடிக்கிறேன். ரோமாபுரி பாண்டியன் சீரியலிலும் முக்கிய ரோலில் நடிக்கிறேன்.
முன்பு, மறைந்த டைரக்டர் கே.பாலசந்தர் அவர்கள் இயக்கிய சேரன் எக்ஸ்பிரஸ் சீரியலில் நடித்தேன். 30 எபிசோடில் 20 கதைகள். அதில் மொத்தம் 5 கேரக்டர்கள் தான். நான் தான் ஹீரோயினாக நடித்தேன். அப்போது கருணாநிதி, அந்த சீரியலை பார்த்து விட்டு எனது நடிப்பு சிறப்பாக இருந்ததாக கே.பி சாரிடம் சொல்லியிருக்கிறார். அந்தவகையில், இப்போது அதே கருணாநிதியின் கதை வசனத்தில் ஒளிபரப்பாகி வரும் ரோமாபுரி பாண்டியன் தொடரில் நடிப்பது பெருமையாக உள்ளது.
மேலும், நான் நடிப்பதில் சரித்திர கதைகளில் ஒளிபரப்பாகி வரும் ரோமாபுரி பாண்டியன், ராமானுஜர் சீரியல்களில் அந்த காலகட்டத்து காஸ்டியூம் அணிந்து, இலக்கிய தமிழ் பேசி நடிப்பது புதுமையான அனுபவமாக இருக்கிறது. அது மனதுக்கு திருப்தியாகவும் உள்ளது என்று கூறும் நடிகை சாந்தி ஆனந்த், சினிமாவில் நான் ஒரு காலத்தில் கதாநாயகி என்றபோதும், இப்போது சின்னச்சின்ன வேடங்கள்தான் கிடைக்கிறது. பெரிதாக சொல்லும்படியாக இல்லை. என்றாலும், கிடைக்கிற வாய்ப்புகளை விடக்கூடாதே என்பதற்காக யார் எந்த வேடத்தில் நடிக்க சொன்னாலும் நடித்து வருகிறேன். அந்த வகையில் சினிமா, சீரியல், டாகுமெண்டரி என்று எதுவாக இருந்தாலும் தொடர்ந்து நடித்துக்கொண்டேயிருப்பேன் என்கிறார்.