பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | 'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' |
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் மற்றும், பெப்சி எனப்படும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு இடையே நடந்த பேச்சில், 27.5 சதவீத ஊதிய உயர்வுக்கு உடன்பாடு ஏற்பட்டது. சின்னத்திரை நாடக தயாரிப்பாளர் சங்கம் மற்றும், பெப்சி இடையே, ஊதிய உயர்வு குறித்த பேச்சு நேற்று நடந்தது. இதில், சின்னத்திரை சங்க தலைவர் சுஜாதா விஜயகுமார், செயலர் குஷ்பூ, பெப்சி தலைவர் சிவா உட்பட, பலர் பங்கேற்றனர்.
அதன்பின், வெளியிடப்பட்ட அறிக்கை: சின்னத்திரை மிகவும் நலிந்து வருகிறது. இதற்கு, ஊதிய உயர்வு மிகவும் அவசியம். இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில், 27.5 சதவீத ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை, 10 சதவீத உயர்வு மட்டுமே அளிக்கப்பட்டது. இந்த முறை, 27.5 சதவீத உயர்வு அளிக்கப்பட்டுள்ளது; இது, இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம், சின்னத்திரையை சேர்ந்த, ஏழு பிரிவில் பணியாற்றும், 5,000 தொழிலாளர்கள் பயனடைவர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
- நமது நிருபர் -