யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது | 7 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் படம்! | ஜெய்யின் 'வொர்கர்' புதிய பட அறிவிப்பு! | மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ? |
'செல்லமே' சீரியலில் நான் நடித்திருந்த ஐபிஎஸ் வேடம் பலராலும் பாராட்டப்பட்டது. குறிப்பாக, செல்லமே சீரியலின் நாயகி ராதிகா மேடம் இந்த போலீஸ் டிரஸ்ல அசத்தலா இருக்கே. ரொம்ப அசால்டா நடிக்கிறே என்று பாராட்டினார். அது எனக்கு பெரிய எனர்ஜியாக அமைந்தது என்கிறார் நடிகை ஷில்பா. தினமலர் இணையதளத்திற்காக அவரை அளித்த பேட்டி...
* எந்த மாதிரியான கதாபாத்திரங்கள் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
என்னைப்பொறுத்தவரை பாசிட்டீவ் நெகடீவ் என எந்தமாதிரியான வேடங்களாக இருந்தாலும் அதற்கேற்ப என்னை முழுமையாக மாற்றிக்கொண்டு நடிப்பேன். அப்படித்தான் பல ஆண்டுகளாக சீரியல்களில் நடித்து வருகிறேன். அதனால் தான் என்னை நம்பி எந்தமாதிரியான வேடங்களாக இருந்தாலும் டைரக்டர்கள் கொடுப்பார்கள். நானும், அவர்களின் எதிர்பார்ப்பினை அறிந்து அதற்கேற்ப நடித்து வருகிறேன்.
அந்த வகையில், இப்போது தாமரை தொடரில் நடித்து வரும் முத்துலட்சுமி கேரக்டர் பேசப்பட்டு வருகிறது. பழி வாங்கும் கேரக்டர் என்பதால் நான் தோன்றும் ஒவ்வொரு காட்சிகளுமே பரபரப்பாக இருப்பதாக என்னை சந்திக்கும் நேயர்கள் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு தாமரை தொடர் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நானும் இந்த மாதிரி சேலஞ்சிங்கான வேடம் என்றால் அதிக ஈடுபாடு காட்டி நடிப்பேன். அதனால் எனக்கு மட்டுமின்றி சீரியல் பார்க்கும் நேயர்களுக்கும் முத்துலட்சுமி கேரக்டர் ரொம்ப பிடித்து விட்டது.
மேலும், நான் பலவிதமான வேடங்களில் நடித்திருந்தாலும், செல்லமே சீரியலில் ராதிகா மேடத்திற்கு எதிராக நடித்திருந்த ஐபிஎஸ் வேடம் பலராலும் பாராட்டப் பட்டது. குறிப்பாக, செல்லமே சீரியலின் நாயகி ராதிகா மேடம், இந்த போலீஸ் டிரஸ்ல அசத்தலா இருக்கே. ரொம்ப அசால்டா நடிக்கிறே என்று பாராட்டினார். அது எனக்கு பெரிய எனர்ஜியாகவும், இன்னும் நன்றாக நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. அதேபோல் சித்தி சீரியலில் நான் நடித்த போலீஸ் வேடத்தை பார்த்தும் போலீஸ்னா நீதான். ரொம்ப ரியலாக நடிக்கிறே என்று அப்போதே ராதிகா மேடம் என்னை பாராட்டினார். இதனால் எனக்கு போலீஸ் வேடங்கள் மீது மரியாதையும், ஆர்வமும் அதிகரித்து விட்டது.
* சீரியலில் முன்னணி நடிகையாக இருக்கும் நீங்கள் சினிமாவிற்கு ஏன் வருவதில்லை?
எனது ஆரம்ப காலத்தில் சில படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் பின்னர் சீரியல்களில் பிசியாகி விட்டதால் சினிமாவை நினைத்துப்பார்க்கக்கூட நேரமில்லை. மேலும், ஒரே நேரத்தில் இரண்டு மெகா சீரியல்களில் நடித்துக்கொண்டு படங்களில் நடிப்பதற்கு நேரம் கிடைக்காது. ஆனால், சினிமாவில் எனக்கு பிடித்தமான வேடம் கிடைத்து, அதற்கு காலநேரமும் ஒத்துழைத்தால் மீண்டும் சினிமாவில் நடிப்பேன். மேலும், நான் நடிப்பு, டயமிங் இரண்டிலுமே சின்சியாரிட்டியை கடைபிடிப்பேன். குறிப்பாக, கதாபாத்திரங்களில் நூறு சதவிகிதம் சரியான நடிப்பை வெளிப்படுத்தியாக வேண்டும் என்ற வெறியுடன் நடிப்பேன்.
அதேபோல், நேரம் தவறாமை எனக்கு ரொம்ப முக்கியம். குறித்த நேரத்திற்குள் ஸ்பாட்டில் ஆஜராகி விடுவேன். ஸ்பாட்டில் தேவையில்லாத விசயங்களை அரட்டையடிப்பது. தேவையற்றதை யோசிப்பதெல்லாம் எனக்கு பிடிக்காது. மேக்கப் போட்டு விட்டால், வேறு எதைப்பற்றியும் யோசிக்க மாட்டேன். சீரியல் பற்றியும், அடுத்த காட்சியில் எந்த மாதிரி நடிக்க வேண்டும் என்பதை பற்றியும்தான் முழுமையாக நினைத்துக்கொண்டிருப்பேன். அதுதான் எனக்கு பிடிக்கும். அதேபோல் ப்ராம்ட்டிங் பண்ண மாட்டேன். டயலாக்கை முழுமையாக உள்வாங்கிக்கொண்டுதான் டயலாக் பேசி நடித்து வருகிறேன்.
* சீரியல் பார்க்கும் பெண்களுக்கு நடிக்கும் கதாபாத்திரங்கள் மூலம் அட்வைஸ் சொல்ல விரும்புவீர்களா?
பெரும்பாலும் நான் நடிக்கிற கேரக்டர்கள் வில்லியாக இருந்தாலும் பின்னர் பாசிட்டீவாகவே முடியும் வகையில்தான் கிடைத்து வருகின்றன. ஆனால் அப்படி நடிக்கிற வேடங்கள் மூலம், பெண்கள் அளவுக்கதிகமாக ஜோதிடத்தை நம்புவது, சகுனம் பார்ப்பது. சாமியார்களைத் தேடிச்செல்வது போன்ற விசயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற காட்சிகளில் நடித்திருக்கிறேன். அந்த மாதிரி காட்சிகளில் தொடர்ந்து நடித்து அதிக மூட நம்பிக்கை உள்ளவர்களுக்கு என்னால் முடிந்த அளவு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன்.
* சினிமா போன்று சீரியல் நடிகைகளுக்கிடையே போட்டி மனப்பான்மை உள்ளதா?
அப்படி எந்த போட்டியும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் என்னைக்கேட்டால், ஏற்கனவே வில்லியாக நடித்த வேடத்தை விட அதற்கடுத்து நடிக்கும் வேடத்தில் இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று எனக்கு நானே போட்டியாக செயல்பட்டு வருகிறேன். அப்படி நான் நடிப்பதை ராதிகா மேடம் போன்ற சீனியர் கலைஞர்கள் என்னை பாராட்டுவது எனக்கு சொல்ல முடியாத சந்தோசத்தைக் கொடுக்கிறது. அதனால் இப்படி சீனியர்களிடம் பாராட்டு பெற வேண்டும் என்பதற்காகவே கதாபாத்திரங்களை உணர்ந்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறேன்.
* நெகடீவ் வேடங்கள்தான் ரீச் ஆகும் என்று சிலர் சொல்கிறார்களே?
அப்படியெல்லாம் இல்லை. கேரக்டர்களின் தன்மைதான் அதை முடிவு செய்யும். மேலும், பாசிட்டீவ், நெகடீவ் என எதுவாக இருந்தாலும், அதுவாகவே மாற வேண்டும். அப்போது சீரியல் பார்க்கும் பெண்கள் மனதில் பெரிய இடம் கிடைக்கிறது. அதோடு, வில்லியாக நடிக்கும்போது நேயர்கள் திட்டுவதாககூட சிலர் சொல்கிறார்கள். ஆனால் என்னை இதுவரை அப்படி யாருமே திட்டியதில்லை. நான் வில்லியாக நடிப்பதைகூட ரசிக்கிறார்கள். ஷாப்பிங் செல்லும்போது என்னை பார்க்கும் பெண்கள், சூப்பராக நடிக்கிறீர்கள் என்று என்னுடன் செல்பி எடுத்துக்கொள்கிறார்கள். ஆக, எந்தமாதிரியான வேடமாக இருந்தாலும் நல்ல பர்பாமென்ஸ் கொடுத்தால் நேயர்களின் மனதில் இடம் பிடிக்க முடியும் என்பது என் கருத்து என்கிறார் ஷில்பா.