இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
திருமணம் எனக்கு ஒரு தடையில்லை. என் கணவர் கணேஷ் வெங்கட்ராமன் என்னை உற்சாகப்படுத்தி வருகிறார். அதனால் எப்போதும் போலவே எனது சின்னத்திரை பயணம் தொடரும் என்கிறார் நிஷா கணேஷ் வெங்கட்ராமன்.
மேலும் அவர் கூறும்போது, நான் சின்னத்திரையில் கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி, மகாபாரதம் போன்ற தொடர்களில் நடித்திருக்கிறேன். அதோடு, கிச்சன் கலாட்டா, சூர்ய வணக்கம் உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறேன். சேனல் மட்டுமின்றி, வெளிநாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று வருகிறேன். சமீபத்தில்கூட மலேசியாவில் யுவன் ஷங்கர் ராஜா நடத்திய இசை நிகழ்ச்சியை நானும், எனது கணவர் கணேஷ்வெங்கட்ராமும் சேர்ந்து தொகுத்து வழங்கினோம். மேலும், இவன் வேற மாதிரி, நான் சிகப்பு மனிதன், என்ன சத்தம் இந்த நேரம், வில் அம்பு ஆகிய படங்களில் கேரக்டர் ரோல்களிலும் நடித்திருக்கிறேன்.
சிலருக்கு வேண்டுமானால் திருமணம் என்பது ஒரு ஸ்பீடு பிரேக்காக இருந்திருக்கலாம். ஆனால், என்னைப்பொறுத்தவரை இப்போதுதான் எனது நடிப்பு, தொகுப்பாளினி பயணம் இன்னும் சூடுபிடித்துள்ளது. எனது கணவர் கணேஷ் வெங்கட்ராம்தான் இதற்கு காரணம். அவர் என்னை உற்சாகப்படுத்துகிறார். அதோடு, அவருடன் சேர்ந்தே பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது எனக்கு இன்னும் சந்தோசமாக உள்ளது. மனசுக்கு பிடித்தமான வேலையை, மனசுக்கு பிடித்தமான கணவருடன் சேர்ந்து செய்யும்போது செய்கிற வேலையும் சிறப்பாக வருகிறது.
மேலும், நான் மகாபாரதம் தொடரில் நடித்த திரெளபதி வேடம் என் கணவருக்கு மிகவும் பிடிக்கும். அவரும் ஒரு நடிகர் என்பதால், எனது பர்பாமென்ஸ் பற்றிய நிறைகுறைகளை சொல்கிறார். இப்படி இருவருமே கலைத்துறையைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் பெரிய பலமாக உள்ளது என்று கூறும் நிஷா கணேஷ் வெங்கட்ராமன், தொடர்ந்து சினிமா, சின்னத்திரை என்று பயணிக்க ஆசைப்படுகிறாராம்.