இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
தமிழில், 'சின்னப்பாப்பா பெரியபாப்பா' தொடரில் நடித்து வரும் நளினி, தெலுங்கில் அம்மன்னா கோடலா என்ற சீரியலில் நடித்து வருகிறார். ஒன்றரை வருடமாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் நடித்தமைக்காக 3 விருதுகள் பெற்றிருக்கிறாராம்.
இதுபற்றி நளினி கூறும்போது, அம்மன்னா கோடலா என்றால் தமிழில் அப்ப அப்படியா என் மருமக என்று அர்த்தம். இதில் கஞ்சத்தனமுள்ள மாமியாராக நடித்திருக்கிறேன். மாந்தோப்பு கிளியே படத்தில் சுருளிராஜன் நடித்தது போன்ற வேடம். இந்த சீரியல் அங்கு நம்பர் ஒன்னாக போய்க்கொண்டிருக்கிறது. இதில் லீடு ரோலில் நடித்துள்ள எனக்கு ஆந்திரா அரசு விருது, நந்தி விருது, பெஸ்ட் கிரிட்டிக்ஸ் அவார்டு என இதுவரை 3 விருதுகளை பெற்றுவிட்டேன். அதனால் தெலுங்கு சீரியல்களில் நடிக்க வேண்டுமென்ற ஆர்வம் அதிகரித்து விட்டது.
மேலும், தெலுங்கில் அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறேன். இதன்காரணமாக தமிழில் மேற்கொண்டு சினிமா, சின்னத்திரை தொடர்களில் நடிக்க எனக்கு நேரமில்லை. இப்படி தெலுங்கு சினிமா, சீரியல் என இரண்டிலுமே பிசியாகி விட்டதால் ஐதராபாத்திலேயே நிரந்தரமாக தங்கிவிட்டேன். மாதத்தில் நான்கு நாட்கள் சின்னப் பாப்பா பெரிய பாப்பா சீரியலுக்காக மட்டுமே சென்னை வருகிறேன் என்கிறார் நளினி.