இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
வருகிற 15ந் தேதி முதல் ராஜ் டி.வியில் இந்திரா என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகிறது. புகழ்பெற்ற இந்தி தொடரை தமிழில் டப் செய்து ஒளிபரப்புகிறார்கள். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இந்திரா தொடர் மற்ற தொடர்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. தொடரின் நாயகியான இந்திராவிற்கு சரியாக பேச வராது. திக்குவாய் பிரச்சினை உள்ளனர். இதனால் அவருக்கு திருமணம் நடக்காது. கடைசியில் ஒருவன் திருமணம் செய்து கொள்ள முன்வருகிறான். அந்த திருமணம் வரதட்சணை பிரச்சினையால் நின்று விடுகிறது. இதனால் வாழ்க்கையில் ஜெயித்து காட்ட வேண்டும் என்று கருதும் இந்திரா, ஒரு தொலைக்காடச்சியில் தொகுப்பாளினியாக வேலைக்குச் சேர்கிறார். திக்குவாய் பிரச்சினை உள்ளவர் எப்படி தொகுப்பாளினியாக ஜெயிக்கிறார். அந்த சேனல் முதலாளியின் மகனையே திருமணம் செய்கிற அளவிற்கு எப்படி வளர்கிறார் என்பதுதான் தொடரின் கதை.