இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
பாசமலர் தொடரில் பாசக்கார தங்கையாக நடித்து வருபவர் ஷாம்லி. இவர் ஸ்ரீகாந்த் நடித்துள்ள ஓம் சாந்தி ஓம் படத்திலும் நடித்துள்ளார். இதுதவிர மேலும் சில படவாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளதாம். ஆனால், சின்னத்திரையிலேயே பிசியாக இருப்பதால் சினிமாவை அவரால் ஏற்க முடியவில்லையாம்.
இதுகுறித்து ஷாம்லி மேலும் கூறும்போது, நான் சின்னத்திரையில் என்ட்ரி ஆனதில் இருந்தே பிசியாகத்தான் இருக்கிறேன். அப்போது சில தொடர்களில் எனது நடிப்பைப்பார்த்து விட்டு சினிமாவில் நடிக்க அழைப்பார்கள். ஆனால் அவர்கள் கால்சீட் கேட்கும் நேரத்தில் நான் சீரியல்களில் பிசியாக இருப்பேன். அப்படி பல சினிமா வாயப்புகள் நழுவிப்போய் உள்ளன. அதில் நடித்த ஒரு படம் ஓம் சாந்தி ஓம்.
மேலும், சினிமாவில் நடிக்க அழைப்பவர்கள் நடிக்க தெரியுமா? என்று கேட்பதை விட கிளாமராக நடிப்பீர்களா? என்றுதான் முதலில் கேட்கிறார்கள். அதுவே எனக்கு பிடிக்கவில்லை. அதோடு சீரியல்களில் நடித்து நல்லதொரு இமேஜ் உள்ளது. அதை சினிமாவில் நடித்து கெடுத்துக்கொள்ள வேண்டுமா? என்றும் நினைக்கிறேன். அதனால் சில படங்களில் கதாநாயகியாக நடிக்க கேட்டபோதுகூட, எனக்கு ஏதாவது நல்ல கேரக்டர் இருந்தால் கொடுங்கள் என்கிறேன். ஆனால் அப்படி நான் கேட்டதும் போய் விடுபவர்கள் திரும்பி வருவதில்லை என்று கூறும் ஷாம்லி, என்னைக்கேட்டால் சீரியல்களில் நடிப்பதுதான் பிடித்திருக்கிறது. திருப்தியாகவும் உள்ளது. அதனால், எதிர்காலத்தில் டைட்டில் வேடங்களில் நடித்து சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்கிறார்.