இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
சின்னத்திரை நட்சத்திரங்கள் சினிமாவில் நடிக்கத்தான் சென்று கொண்டிருந்தார்கள். இப்போது பாடுவதற்கும் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இம்சை அரசன் 22ம் புலிகேசி படத்தில் வடிவேலு அடிக்கடி பேசும் கககபோ என்ற வசனத்தையே தலைப்பாக கொண்டு ஒரு படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில்தான் சின்னத்திரை நட்சத்திரங்கள் பாடி உள்ளனர்.
தினா, பி.சி.சிவம், சி.வி.அமரா ஆணீய 3 பேர் இசை அமைக்கும் இந்தப் படத்தில் காதலை பெருமைப்படுத்தும் ஒரு பாடலை தாமரை தொடரின் ஹீரோ சாய்பிரசாத், தென்றல் தொடரின் நாயகி காவியா வர்ஷினி, நாதஸ்வரம் தொடரின் நாயகி ஸ்ருத்திகா, கோலங்கள் தொடரில் நடித்த ஷ்யாம், வாணி ராணி தொடரில் நடித்த நீலிமா ஆகியோர் பாடி உள்ளனர். இந்த பாடல் காதலர் தினமான பிப்ரவரி 14ந் தேதி வெளிவருகிறது.
ககபோ படத்தை பி.எஸ்.விஜய் என்ற புதுமுகம் இயக்குகிறார், இக்பால், விக்ரம் ஒளிப்பதிவு செய்கிறார்கள். இதில் புதுமுகங்களுடன் பவர் ஸ்டார், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம்புலி, கருணாஸ், மதன்பாப், மயில்சாமி, ரோபோ சங்கர், உள்ளிட்ட 25 காமெடி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இது ஒரு காதல் காமெடி படம். சின்னத்திரை நட்சத்திரங்கள் இணைந்த ஒரு பாடலை பாடியிருப்பது இதுவே முதல்முறையாகும்.