யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது | 7 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் படம்! | ஜெய்யின் 'வொர்கர்' புதிய பட அறிவிப்பு! | மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ? |
பெப்ஸி உமா, இளமை புதுமை அர்ச்சனாவுக்கு பிறகு பேசப்படும் சில வீடியோ ஜாக்கிகளில் விஜய் டிவி ரம்யாவும் ஒருவர். இவர், கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம் உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்.
அதோடு, மழை, மங்காத்தா, மாஸ் போன்ற படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வந்தவர், மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் அனன்யா என்ற கேரக்டரில் நடித்தார். தோழி வேடம் என்றாலும், கவனிக்கப்படும் கதாபாத்திரமாக அமைந்தது. அதனால் இப்போது மேலும் சில டைரக்டர்கள் ரம்யாவை நடிக்க வைப்பதற்காக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் அடுத்து இயக்கும் ஒரு படத்தில் ரம்யா நடிக்கிறாராம்.
தனது பெரும்பாலான படங்களில் பெண்களை மையமாக கொண்ட கதைகளாகவே ஆண்ட்ரூஸ் இயக்கியிருப்பதோடு, தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடம் கொடுத்திருப்பதால் அப்படத்தில் நடிப்பதற்கு ரம்யாவும் ஓகே சொல்லிவிட்டாராம்.