யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது | 7 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் படம்! | ஜெய்யின் 'வொர்கர்' புதிய பட அறிவிப்பு! | மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ? |
செய்தி சார்ந்து புதிய நிகழ்ச்சிகளை புதிய கோணங்களில் தந்து கொண்டிருக்கிறது நியூஸ் 7 சேனல். அந்த வரிசையில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு அதிகமான ஆதரவை பெற்று வருகிறது மாண்புமிகு நீதியரசர்கள் என்ற நிகழ்ச்சி. பொதுமக்களை விட்டு விலகியே நிற்கும் நீதிபதிகளை மக்களோடு பேசவிட்டு பல அரிய தகல்வகளை தரும் நிகழ்ச்சி.மக்கள் அன்றாடம் சந்திக்கும் நிலப் பிரச்சினை, விவாகரத்து, இட ஒதுக்கீடு, கல்வி கட்டண கொள்ளை, தவறான மருத்துவ சிகிச்சை, உள்ளிட்ட பல பிரச்சினைகள் பற்றி மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு முன்னாள் பிரபல நீதியரசர்கள் பதிலளிக்கிறார்கள். அதோடு தாங்கள் சந்தித்த வழக்குகள், வழங்கிய தீர்ப்புகள் பற்றியும் கூறுகிறார்கள். பிரபலமான வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் பற்றியும் தங்கள் கருத்தைக் கூறுகிறார்கள். இந்த புதுமையான நிகழ்ச்சி. சனிக்கிழமைதோறும் காலை9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. கோபாலகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.