யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது | 7 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் படம்! | ஜெய்யின் 'வொர்கர்' புதிய பட அறிவிப்பு! | மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ? |
புதுயுகம் சேனலில் வருகிற 8ந் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் பட்டுச்சேலை. திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகிறது. மாமியார் மருமகள் சண்டை, கணவனின் மனைவி சின்ன வீடு சண்டைகளிலிருந்து விலகி வித்தியாசமான காதல் கதையாக ஒளிபரப்பாகிறது பட்டுச்சேலை.
மிகப்பெரிய பட்டுச் சேலை கடை வைத்திருப்பவர் காஞ்சனா. தன் கடைக்கு போட்டியாக யார் கடை போட்டாலும் அவர்களை விரட்டி விட்டுத்தான் வேறு வேலை பார்ப்பார். அந்த அளவிற்கு கொடூரமானவர். அவரிடம் தவனைக்கு சேலை வாங்கி கிராமத்து மக்களுக்கு கடனுக்கு விற்பவர் தாமரை. வீரமான, நியாயமான பொண்ணு, மற்றவர்களுக்காக போராடுகிற பெண். காஞ்சனாவின் கடைக்கு அடிக்கடி வரும் தாமரைக்கும், காஞ்சனாவின் மகன் அஜய்க்கும் காதல் மலர்கிறது. எதிரில் கடை போட்டாலே ஆளை அழித்து விடும் காஞ்சனா, கோடீஸ்வரியான தன் மகனை சேலை விற்கும் பெண் காதலித்தார் விடுவாரா.?. காஞ்சனா, தாமரையின் மோதல்தான் கதை. இவர்களின் மோதலை மக்கள் எதுவரை ரசிக்கிறார்களோ அதுவரை சீரியல் தொடரும். இதுவரை அன்பான அம்மா கேரக்டரில் நடித்து வந்த மீனா குமாரி இதில் வில்லி காஞ்சனாவாக நடிக்கிறார்.