ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் படங்கள், தொடர்கள் அறிவிப்பு | கடன் பிரச்னை இருந்தாலும் நிம்மதியாக தூங்குகிறேன்: சேரன் பேச்சு | 100 முறை ஆர்ஆர்ஆர் பார்த்தேன் : ராம்சரணின் வீட்டிற்கே வந்து நெகிழ்ந்த ஜப்பான் ரசிகை | நடிகை ஹேமா மீதான போதைப்பொருள் வழக்கு ரத்து | படம் ரிலீஸ் : சிறையில் இருந்தபடி ரசிகர்களுக்கு நடிகர் தர்ஷன் கோரிக்கை | உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டளிக்க முடியாத மம்முட்டி | மலையாள திரைப்பட விழா நடுவர் மீது பாலியல் புகார் | மகன் மற்றும் நிவின்பாலியுடன் தனி விமானத்தில் பயணித்த மோகன்லால் | உயர் நீதிமன்றத்திலும் நடந்ததை சொல்வேன் : நடிகை வழக்கு குறித்து நடிகர் லால் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: வில்லனையும், நாயகியையும் முன்னிறுத்திய எம்ஜிஆர் |

ஜீ தமிழ் சேனலில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திய சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. தற்போது அவர் அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்து படங்கள் இயக்கிக் கொண்டிருக்கிறார். அவர் மீண்டும் சின்னத்திரைக்கு வரும் யோசனையில் இருக்கிறார். பல சேனல்கள் சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சியை வேறு தலைப்பின் கீழ் நடத்த அவரை அணுகியுள்ளது. ஆனால் அப்படி பங்கேற்க அவர் சில பல நிபந்தனைகள் விதிக்கிறாராம். இதனால் அவரின் நிபந்தனைகளுக்கு சேனல்கள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, தற்போது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்தி வரும் சுதா சந்திரனால் அதனை சரியாக நடத்த முடியவில்லை என்றும், இதனால் ஜீ தமிழ் சேனலே, லட்சுமி ராமகிருஷ்ணனை மீண்டும் அழைக்கலாம் என்று ஒரு தகவல் கூறுகிறது.