யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது | 7 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் படம்! | ஜெய்யின் 'வொர்கர்' புதிய பட அறிவிப்பு! | மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ? |
தென்றல் சீரியலை எடுத்துக்கொண்டால் துளசி என்ற கேரக்டர் எவ்வளவு முக்கியமோ அதேபோல் தமிழ் என்ற கேரக்டரும் முக்கியமானதாகவே இருந்தது. ஆக, சமீபகாலமாய் சீரியல்களில் ஆண்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கி விட்டனர் என்கிறார் சீரியல் நடிகர் ஐயப்பன்.
தினமலர் இணையதளத்திற்காக அவரிடம் சில கேள்விகள்...
உங்கள் நடிப்பில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர்கள்?
கல்யாண பரிசு, அழகி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு சீரியல் இரவு, இன்னொன்று மதியம் என நேயர்கள் அதிகமாக டிவி பார்க்கக்கூடிய நேரங்களில் ஒளிபரப்பாகி வருவதால் இந்த சீரியல்கள் நல்ல ரீச்சாகியுள்ளது. இதில் கல்யாண பரிசுவில் வீரா, அழகியில் பாபு என்கிற கேரக்டர்களில் நான் நடிக்கிறேன்.
இதுவரை நடித்ததில் உங்களை நேயர்கள் மத்தியில் பேச வைத்த சீரியல் எது?
கல்யாண பரிசு, அழகி சீரியல்களில் எனது கேரக்டர் முதலில் ரப் அண்ட் டப்பாகத்தான் இருந்தது. ஆனால் பின்னர் அப்படியே சாப்ட்டாக பாசிட்டீவாக மாறி விட்டது. முதலில் என்னை கெட்டவனாக பார்த்த நேயர்களுக்கு பின்னர் நான் நல்லவனானதும் அதிகம் பிடித்து விட்டது. ஆக, நெகடீவ் வேடங்களே பெரிதாக ரீச்சாகும் என்கிற ஒரு நிலை இருந்தபோதும். இந்த மாதிரி வேடங்களும் நேயர்களை கவர்ந்து வருகிறது. எனக்கு வர்றது எல்லாமே இந்தமாதிரிதான் அமையுது. அப்படி நடித்துள்ள எல்லா சீரியல்களுமே எனக்கு ப்ளசாகியிருக்கின்றன.
மேலும், முதலில் நான் விஜய் டிவியில் வெளியான கனாக்காணும் காலங்கள் தொடரில் நடித்தேன். உன்னி என்கிற மலையாள ரோல் பண்ணினேன். பின்னர் வசந்தம், புகுந்த வீடு, தென்றல், தெய்வம் தந்த வீடு என பல சீரியல்களில் நடித்திருக்கிறேன். முக்கியமாக ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மாறுபட்ட வேடங்களாக நடித்துள்ளேன்.
சீரியல் என்றாலே பெண்கள் ராஜ்ஜியமாகி விட்டதே. இந்தநிலை மாறுமா?
பெண்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பெண்களே சீரியல்களுக்கு மெயின் ஆடியன்ஸ் என்பதால் அப்படி செய்கிறார்கள். ஆனபோதும், இப்போது ஆண்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தென்றல் சீரியலை எடுத்துக்கொண்டால் துளசி என்ற கேரக்டர் எவ்வளவு முக்கியமோ அதேபோல் தமிழ் என்ற கேரக்டரும் முக்கியமானதுதான். ஆக, பெண்களுக்கு முதலிடம் இருந்தபோதும், ஆண்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது. குடும்பம் என்று எடுத்துக்கொண்டால் கணவன் மனைவிதானே. அதனால் பல சீரியல்களில் ஆண் கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம கொடுக்கவே செய்கிறார்கள்.
எந்த மாதிரி கேரக்டர்கள் என்சாய் பண்ணி நடிப்பீர்கள்?
என்னைப்பொறுத்தவரை சேலஞ்சிங்கான வேடங்களில் அதிகமாக என்சாய் பண்ணி நடிப்பேன். அதேசமயம் டைரக்டர்கள் என்னை நம்பி கொடுக்கிற வேடங்களையும் விடுவதில்லை. முக்கியாக பாசிட்டீவோ, நெகடீவோ எதுவாக இருந்தாலும் எனது உழைப்பை முழுசாக கொடுக்கிறேன். அப்படி கொடுப்பதினால் நான் நடிக்கிற கேரக்டர்கள் நூறு சதவிகிதம் சக்சஸ் ஆகி வருகிறது.
குறிப்பாக, ஒரு கேரக்டரில் நடிப்பதற்கு முன்பு அதைப்பற்றி முழுமையாக யோசிப்பேன். பின்னர் அந்த கேரக்டர் எந்தமாதிரி ரியாக்ட் பண்ணும் என்பதை வெளிப்படுத்துவேன். ஒருத்தரை அடி என்று சொன்னால் அடித்துதான் ஆக வேண்டும். அந்த கேரக்டரின் தன்மையை முழுமையாக பிரதிபலிக்க வேண்டும். அந்த கேரக்டருக்குள் போனதும் பிக்சாயிடுவேன். அது எவ்வளவு தூரம் போகுமோ அதுவரை போவேன். முதலில் ஒரு இரண்டு மூன்று எபிசோட் அதை கேட்ச் பண்ணும் வரை கஷ்டமாக இருக்கும். அந்த ரோலுக்குள் இறங்கிவிட்டால் முழுமையாக டிராவல் ஆகிடுவேன்.
நடித்ததில் மனதை தொட்ட கேரக்டர் எது?
கனாக்காணும் காலங்கள், தென்றல், தெய்வம் தந்த வீடு, கல்யாண பரிசு, அழகி போன்ற சீரியல்கள் மனதை தொட்டவை. அதோடு, நேயர்களுக்கு இந்த தொடர்களில் எனது நடிப்பை பெரிதாக பிடித்திருந்தது. நான் வெளியிடங்களுக்கு சென்றால் அந்த கேரக்டர்களின் பெயரை சொல்லித்தான் என்னை அழைப்பார்கள். தங்களை இம்ப்ரஸ் பண்ணியதைப்பற்றியும் சொல்கிறார்கள். புகுந்த வீடு என்ற சீரியலில் முருகன் என்ற ரோலில் நடித்திருந்தேன். போன மாதம் ஒரு ஊருக்கு போயிருந்த இடத்தில் என்னப்பா முருகா எப்படி இருக்கே என்று கேட்கிறர்கள். ஆக, நான் நடித்த எல்லா கேரக்டர்களுமே ஏதோ ஒரு வகையில் என்னையும், ஏதோ ஒரு வகையில் நேயர்களையும் பாதித்திருக்கின்றன.
கேரக்டர்களுக்காக உங்களை எந்தெந்த வகையில் மாற்றிக்கொள்கிறீர்கள்?
அதாவது, நான் நடிக்கும் கேரக்டருக்கு தேவைப்பட்டால் மட்டுமே மேக்கப் போடுவேன். இல்லையேல் மேக்கப் இல்லாமலேயே நடிப்பேன். அதேபோல், அந்த கேரக்டர் எந்தமாதிரியான டிரஸ் போடுமோ அதைத்தான் போடுவேன். யதார்த்தத்தை மீறாமல் நடிப்பையும், உடைகளையும் வெளிப்படுத்தி வருகிறேன். அதுபற்றி முன்பே டைரக்டர்களிடம் கேட்டு முடிவு செய்து வைத்துக்கொண்டு நடிப்பேன்.
சக நடிகர் நடிகைகளில் நடிப்பால் உங்களை கவர்ந்தவர் யார்?
தென்றலில் தீபக், ஸ்ருதி, மருதாணியில் சுஜிதா. இந்த மாதிரி பலர் உள்ளனர். அவர்களுடன் நடிக்கும்போது நமக்கும் நன்றாக நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்படும். தீபக்குடன் தென்றலில் நடிக்கும்போது பயங்கர சேலஞ்சிங்காக இருந்தது. அவர் பண்றது எல்லாமே யதார்த்தமாக இருக்கும்.
வழக்கமான கேரக்டர்களில் இருந்து மாறுபட்ட ரோல்களில் நடிக்க வேண்டுமென்ற ஆசை உள்ளதா?
அது எல்லோருக்கும் உள்ளதுதான். சீரியலுக்கு சீரியல் வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆசை உள்ளது. அதேபோல் ஒவ்வொரு கேரக்டர்களுக்காகவும் பாடிலாங்குவேஜை கூட மாற்றி நடிக்க ஆசைப்படுகிறேன். மேலும், சமீபகாலமாக சீரியல்களின் கதைக்களம் மாறி வருகிறது. முன்பு மாமியார் மருமகள் பிரச்சினையாக பண்ணியவர்கள் இப்போது கல்லூரி, பேய் கதைகள் என பலதரப்பட்ட கதைகள் பக்கம் திரும்பி விட்டனர். இது ஆரோக்யமான நிலைதான். அதனால் எதிர்காலத்தில் சீரியல்கள் இன்னும் புதுமையாக மாறிவிடும். அதோடு, இப்போது சில சீரியல்களில் பாடல், ஆக்சன் காட்சிகளும் இடம்பெற்று வருகிறது. சில சீரியல்களை சினிமா அளவுக்கு பிரமாண்டமாகவும் எடுத்து வருகிறார்கள். அதனால் இன்னும் சில ஆண்டுகளில் சீரியல்களில் பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது என்கிறார் நடிகர் ஐயப்பன்.