பிளாஷ்பேக்: வில்லனையும், நாயகியையும் முன்னிறுத்திய எம்ஜிஆர் | பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் |

மியூசிக் சேனலின் நட்சத்திர தொகுப்பாளராக இருக்கும் சுரேஷ், சினிமாவில் ஹீரோவாகி விட்டார். அவர் நடிக்கும் படத்தின் டைட்டில் மோ. காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் தவிர சூது கவ்வும் ரமேஷ் திலக், முண்டாசுபட்டி ராம்தாஸ், மெட்ராஸ் மாரி உள்பட பலர் நடிக்கிறார்கள். புவன் நல்லான் என்ற புதுமுகம் இயக்குகிறார். பாலசுப்ரமணியத்தின் உதவியாளர் விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்கிறார், ஏ.ஆர்.ரகுமானின் உதவியாளர் சமீர் இசை அமைக்கிறார். விடிஎப் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
ரொமாண்டிக் காமெடி படமான இதன் பெரும் பகுதி படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. வழக்கம்போல கொஞ்சம் திகிலையும் சேர்த்திருத்திருக்கிறார்கள். சந்தானம், ரோபோ சங்கர், சிவகார்த்திகேயன், மா.பா.கா.ஆனந்த் வழியில் தானும் சினிமாவில் ஜெயித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு களம் இறங்கியிருக்கிறார் சுரேஷ்.