இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
பாரதிராஜா இயக்கிய 'கண்களால் கைது செய்' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியாமணி. தொடர்ந்து பாலுமகேந்திரா இயக்கிய 'அது ஒரு கனாக்காலம்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அடுத்து அமீர் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த 'பருத்தி வீரன்' படம் மூலம் சிறந்த நடிகைகக்கான தேசிய விருதையும் பெற்றார். திறமையான நடிகையாக இருந்தாலும் அடுத்து அவர் நடித்து வெளிவந்த 'மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும், ராவணன்' ஆகிய படங்களின் தோல்வியால் அவரால் தமிழில் முன்னணிக்கு வர முடியவில்லை. இருந்தாலும், மலையாளம், கன்னடம் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துக் கொண்டுதானிருந்தார்.
2012ல் வெளிவந்த 'சாருலதா' படம்தான் தமிழில் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம். கடந்த நான்கு வருடங்களாக தமிழில் அவர் நடித்து எந்தப் படமும் வெளிவரவில்லை. இதனிடையே மலையாளத் தொலைக்காட்சியில் 'டி ஃபார் டான்ஸ்' என்ற நிகழ்ச்சியிலும், கன்னடத் தொலைக்காட்சியில் 'டான்சிங் ஸ்டார்' என்ற நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்தார்.
தற்போது தமிழ்த் தொலைக்காட்சியான விஜய் டிவியில் வரும் 30ம் தேதி ஒளிபரப்பாக உள்ள 'கிங் ஆப் டான்ஸ்' என்ற புதிய நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொள்ள உள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் பிரியா மணி நடுவராக கலந்து கொள்வது இதுவே முதல் முறை. டிவிக்கு வந்தவர் சீக்கிரமே ஒரு தமிழ்ப் படத்திலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.