விராட் கோலியாக எஸ்டிஆர், அனுஷ்கா சர்மாவாக திரிஷா? | மீண்டும் ரஜினி, சுந்தர்.சி கூட்டணி? | பல ஆண்டுகளுக்குபின் பேட்டி கொடுத்த விஜய், அஜித் : இந்த மாற்றம் தொடருமா? | ரூ.100 கோடியை தொடுமா ரெட்ரோ? | தொடரும் இயக்குனர் இயக்கத்தில் பஹத் பாசில் | பிளாஷ்பேக் : வில்லன் இமேஜை உடைத்து காட்டுவோம்: கார்த்திக்குடன் டீல் பேசிய ஏவிஎம் | மாலத்தீவில் பார்வதி நாயர் ஹனிமூன் கொண்டாட்டம் | 'கயல்' அமுதா தற்கொலை முயற்சி? | பிளாஷ்பேக் : கவனிக்கப்பட்டாத 'திருமழிசை ஆழ்வார்' | ஹிட் 3 : முதல் நாள் வசூல் 43 கோடி |
தனது பத்து வயதிலேயே சீரியல்களில் நடிக்கத் தொடங்கியவர் சாய் சக்தி. சொந்த பந்தம், வள்ளி, நாதஸ்வரம், சரவணன் மீனாட்சி என இதுவரை 60 டிவி தொடர்களில் நடித்துள்ள அவர், தற்போது ராமானுஜர், சபீதா என்கிற சபாபதி ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். தினமலர் இணையதளத்திற்காக அவரிடம் சில கேள்விகள்...
* ராமானுஜர் தொடரில் எந்த மாதிரி வேடத்தில் நடிக்கிறீர்கள்?
குட்டி பத்மினியின தயாரிப்பில் கலைஞர் வசனம் எழுதிய 63 நாயன்மார்கள் தொடரில் சேக்கிழாராக நடித்தேன். அந்த தொடரில் ஒரு பாடலில் நான் கண் கலங்கி நடித்ததைப்பார்த்து டோட்டல் யூனிட்டே என்னை பாராட்டியது. அந்த சீரியலின் டைரக்டர் இந்த அளவுக்கு நடிப்பீர்கள் என எதிர்பார்க்கவே இல்லை என்று பாராட்டினார். அந்த சீரியலைப்பார்த்து விட்டுத்தான் ராமானுஜர் சரித்திர தொடரில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதில் ராமானுஜரின் நண்பராகிய கூறத்தாழ்வார் வேடத்தில் நடித்து வருகிறேன். கலைஞர் கருணாநிதியின் வசனம் பேசி நடிப்பது பெருமையாக உள்ளது. இந்த தொடரில் டயலாக் டெலிவரி, பாடிலாங்குவேஜ் என முழுமையாக என்னை மாற்றி நடித்திருந்தேன். கலைஞர் கருணாநிதியும் அதை குறிப்பிட்டு என்னை பாராட்டினர்.
* எந்தமாதிரியான வேடங்களில் நடிப்பதில் ஆர்வம் அதிகம்?
இந்த மாதிரியான வேடங்களில் மட்டும்தான் இவர் நடிப்பார் என்று என்னை ஒரு வட்டத்துக்குள் அடக்கிக்கொள்ள நான் ஒருபோதும் நினைத்ததில்லை. அதனால் எந்தமாதிரியான வேடம் என்றாலும் நடித்து வருகிறேன். மேலும், எந்தவொரு கேரக்டரில் நடித்தாலும் எனக்கான காஸ்டியூம், ஹேர் ஸ்டைல் என அனைத்தையும் நான் பாத்து பாத்து செய்வேன். மற்றவர்களிடம் பாராட்டு பெற வேண்டும் என்பதை மனதில் கொண்டு ஒவ்வொரு விசயத்திலும் கவனம் செலுத்தி நடிப்பேன்.
அதேபோல், நாதஸ்வரம் தொடரில் குடிகாரனாக நடித்தேன். குடிகாரன் எப்படி இருப்பான் என்பதை கண்முன்னே கொண்டு வந்தேன். பின்னிட்டீங்க என்று சொன்னார்கள். அவ்வளவு ஹார்டு ஒர்க் பண்ணுவேன். ரோட்டில் இருக்கும் மண்ணை எடுத்து மேலே கொட்டுவேன். ரோட்டில் உருண்டு புரள்வேன். இன்னும் சொல்லப்போனால் நான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பதற்காக தேவையென்றால் நிர்வாணமாக கூட நடிப்பேன். அதுவும் ஆயிரம் பேர் முன்னாடி நடிப்பேன். சினிமாவுக்காக உயிரையே கொடுப்பேன். எனக்கு கூச்சமே கிடையாது. ஒரு அங்கீகாரத்துக்காக எப்படி வேண்டுமென்றாலும் நடிப்பேன்.
* கேரக்டர்களை ஹோம் ஒர்க் செய்வதுண்டா?
ஒவ்வொரு நாளும் நடிப்பதற்கு முன்பு ஹோம் ஒர்க் பண்ணித்தான் கேமரா முன்பு செல்வேன். 6 மணிக்கு படப்பிடிப்பு என்று சொன்னால்கூட அதற்கு முன்பே மேக்கப் போட்டுக்கொண்டு ரெடியாகி விடுவேன். சின்ன வேடம் என்றாலும் அதை சீரியசாக செய்வேன். அதனால்தான் நடிக்க வந்து 12 வருடங்களாக நான் பிசியாக இருக்கிறேன்.
* நடிப்பு தவிர என்னென்ன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறீர்கள்?
ஜோடி நம்பர் ஒன்னில் 7-வது சீசனில் நடனமாடினேன். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அது இது எது நிகழ்ச்சியிலும் குரூப் காமெடி செய்து வருகிறேன். விரைவில் கேப்டன் டிவியில் ரெகுலர் ஷோ பண்ணப்போகிறேன்.
* சபீதா என்கிற சபாபதியில் எந்தமாதிரி ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது?
இந்த சீரியலில் லீடு ரோலில் நடிக்கிறேன். முதன்முதலாக காமெடி கலந்த வேடம். அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது. மேலும், சீரியல்களைப் பொறுத்தவரை நெகடீவ், பாசிட்டீவ், காமெடி என பலதரப்பட்ட வேடங்களில் நடித்து விட்டேன். அதனால் அடுத்தகட்டமாக சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பேய் படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
* பேய் படங்கள் என்று குறிப்பிட்டு சொல்வது ஏன்?
பேய் இருப்பது உண்மையான விசயம். நான் அதை உணர்ந்திருக்கிறேன். கேரளாவில் உள்ள குருவாயூருக்கு ஒரு படப்பிடிப்புக்காக 8 வருடத்துக்கு முன்பு சென்றிருந்தேன். அப்போது தங்கியிருந்த ஹோட்டல் அறையில் நான் பட்ட கஷ்டத்தை மறக்கவே முடியாது. அந்த அறையில் ஒரு பொண்ணு தூக்கு மாட்டி இறந்திருக்கிறாள். பாத்ரூம் போனா டேப் ஓப்பன்ல இருக்கும். கட்டில் தானாக ஆடும். போனை எடுக்கப் போனா எடுக்க முடியாது. இந்த மாதிரி நிறைய அனுபவம் இருக்கு. மேலும், நான் நிறைய சித்தர்களுக்குள் பயணித்துள்ளேன்.
அதனால்தான் நான் உணர்ந்த விசயங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதன்காரணமாக, லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா-3, பா.விஜய் இயக்கி நடித்த ஸ்ட்ராபெர்ரி ஆகிய படங்களில் நடிக்ககூட முயற்சி எடுத்தேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும், இப்போது ஒரு பேய் படத்தில் ஹீரோவாக நடிக்கவே கமிட்டாகியிருக்கிறேன். சீரியல்களில் பிசியாக இருந்தபோதும், அந்த படத்துக்கு எப்படியேனும் கால்சீட் கொடுத்து நடித்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறேன் என்கிறார் சாய் சக்தி.