இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
ஏழாம் உயிர் தொடரில் நடித்து வருகிறார் லட்சுமி விஸ்வநாத். மலையாளத்தில் நில விளக்கு தொடரிலும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். நடித்துக் கொண்டே பி.எட் மற்றும் எம்.எட் படிப்புகளை முடித்தார். பி.ஏ முடித்துள்ள அவர் தற்போது ஏம்.ஏ படிக்க இருக்கிறார். இது தினசரி கல்லூரிக்கு சென்றாக வேண்டிய படிப்பு.
எம்.ஏ படித்து முடித்து விட்டு ஒரு கல்லூரியில் பேராசிரியையாக சேவை செய்ய வேண்டும் என்பே லட்சுமியின் விருப்பம். இதற்காக இந்த இரண்டு சீரியல்களுடன் நடிப்புக்கு குட்பை சொல்ல இருக்கிறார். வருகிற ஜூலை மாதம் கல்லூரிகள் திறந்ததும் கல்லூரிக்கு செல்ல இருக்கிறார். அதற்குள் இந்த இரண்டு தொடர்களும் முடிந்து விடும் என்று நம்புகிறார். சினிமாவிலிருந்து சின்னத்திரைக்கு வராமல் நேரடியாக சின்னத்திரைக்கு வருகிறவர்கள் ஒரு சில சீரியல்களில் நடித்து விட்டு விலகுவது நீண்ட காலமாக நடந்து வருகிற ஒன்று. அந்த வரிசையில் லட்சுமி விஸ்வநாத்தும் இணைந்திருக்கிறார்.