சர்வதேசப் படமாகவே இருக்கும் : அல்லு அர்ஜுன் தந்த அப்டேட் | விஜே சித்துவின் டயங்கரம் | ஒவ்வொரு இந்தியன் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல் ; நடிகர் சோனு சூட் வேதனை | புகை பிடித்தல் மற்றும் மதுவுக்கு எதிரான வாசகங்கள் படம் பார்க்கும் மூடை கெடுக்கிறது : அனுராக் காஷ்யப் | வசூல் சண்டையை ஆரம்பித்த 'ஹிட் 3' : பதிலடி கொடுத்த 'ரெட்ரோ' | சிம்பு, சந்தானம் இணையும் படம் நாளை படப்பூஜை | டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் யார் தெரியுமா? | விராட் கோலியாக எஸ்டிஆர், அனுஷ்கா சர்மாவாக திரிஷா? | மீண்டும் ரஜினி, சுந்தர்.சி கூட்டணி? | பல ஆண்டுகளுக்குபின் பேட்டி கொடுத்த விஜய், அஜித் : இந்த மாற்றம் தொடருமா? |
நூற்றுக்கணக்கான தென்னிந்திய படங்களில் நடித்தவர் நளினி. 2000-ம் ஆண்டில் கிருஷ்ணதாசி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் இப்போதுவரை பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அதோடு, தமிழ், தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தினமலர் இணையதளத்திற்காக அவருடன் ஒரு நேர்காணல்...
தற்போது நடித்து வரும் சீரியல்கள் பற்றி சொல்லுங்கள்?
தமிழில், 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' தொடரில் நடிக்கிறேன். தெலுங்கில் அம்மன்னா கோடலா என்ற சீரியலில் நடிக்கிறேன். ஒன்றரை வருடமாக சூப்பர் ஹிட்டாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கஞ்சத்தனமான மாமியாராக நடித்துள்ளேன். மாந்தோப்பு கிளியே படத்தில் சுருளிராஜன் நடித்திருப்பாரே அதேமாதிரி வேடம். ஆந்திரா அரசு விருது, பெஸ்ட் அத்தை விருது என பல விருதுகளை வாங்கினேன்.
அடுத்து நித்யா மேனனோடு சோட்டாகே நாயுடு படம் பண்ணினேன். அல்லரி நரேஷ், சாய்குமார் நடிக்கிற படங்கள் என பல படங்களில் நடிக்கிறேன். ஆக, தெலுங்கைப் பொறுத்தவரை சினிமா, சீரியல் என இரண்டிலுமே பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். தமிழில் சில படவாய்ப்புகள், சீரியல்கள் வந்தபோதும் கால்சீட் கொடுக்க முடியவில்லை. அதோடு இப்போது ஐதராபாத்தில் செட்டிலாகிவிட்டேன். சின்ன பாப்பா பெரிய பாப்பாவுக்காக மட்டுமே மாதத்தில் நாலு நாட்கள் சென்னை வருகிறேன்.
நீங்கள் சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக இருந்தபோது வடஇந்திய சீரியல்களை தடுக்க முயற்சி எடுத்தீர்களே, அதற்கு பலன் கிடைத்ததா?
நான் தலைவராக இருந்தபோது அதற்கான முயற்சி எடுத்தோம். சேனல்களுக்கு சென்று பேசியபோது, நாங்கள் நிறைய பணம் கொடுத்து சீரியல்களை வாங்கி விட்டோம். அதனால் ஒளிபரப்பாகும் சீரியலை மட்டுமே நிறுத்த சொல்லாதீர்கள். இனிமேல் நாங்கள் வடஇந்திய சீரியல்களை வாங்க மாட்டோம் என்றனர். ஆனால் பின்னர் தலைவர் பொறுப்புக்கான வேலைகளை செய்வதற்கு எனக்கு போதுமான நேரமில்லாததால் விலகிக்கொண்டேன். ஆனால், இப்போது பொறுப்பில் இருப்பவர்கள் வடஇந்திய சீரியல்களை தடுத்து நிறுத்த போராட்டங்கள் நடத்தினால் அதில் கண்டிப்பாக நான் கலந்து கொள்வேன்.
ஆனால் வடஇந்திய சீரியல்களின் பிரமாண்டம் நம்முடைய நேயர்களை இழுக்கிறதே. அதை தடுக்க என்ன முயற்சி செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
நம்முடைய நேட்டிவிட்டி என்று ஒன்று இருக்கிறது. நாம் வீட்டில் இருக்கும்போது சாதாரணமாகத்தான் இருப்போம். ஆனால் அவர்கள் எப்போதுமே கலர்புல்லான காஸ்டியூம், நகைகளைதான் அணிந்திருப்பார்கள். அப்படியே அவர்கள் சீரியல்களிலும் நடிக்கிறார்கள். நம்ம ஊர் பெண்களுக்கு அதை பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது. அதனால் அதை ரசிக்கிறார்கள். நம்ம சீரியல்களிலும் அதே பிரமாண்டத்தை புகுத்தினால் நேட்டிவிட்டி கெட்டு விடும். நமக்கென்று ஒரு கல்ச்சர் உள்ளது. நாம் அதை மீற முடியாது.
பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து விட்டீர்கள். உங்களுக்கு நிறைவேறாத ஆசைகள் என்று ஏதேனும் உள்ளதா?
சின்ன பாப்பா பெரிய பாப்பாவிலேயே நான் ஓராயிரம் கேரக்டர்கள் பண்ணி விட்டேன். அதைப்பார்த்து விட்டு, கமல் சாரே உங்களை பார்த்துதான் கத்துக்கொள்ளனும் என்கிறார்கள். என்னென்னவோ பண்ணியாச்சு. கடவுளோட ஆசீர்வாதம் இருப்பதினால் சந்தோசமாக போய்க்கொண்டிருக்கிறது.
ஆடியன்ஸின் ரெஸ்பான்ஸ் எப்படி உள்ளது?
சமீபத்தில் என் உறவினரின் திருமணத்திற்கு சென்றிருந்தேன். வயதானவர்களும், சின்ன பிள்ளைகளும் சின்ன பாப்பாவுடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆர்வத்துடன் வந்தனர். என் பெயர் நளினி என்பதுகூட மாறி இப்போது சின்ன பாப்பாவாகி விட்டது. குழந்தைகளை பார்க்க ஆசையாக உள்ளது. என்னை நெருங்கி வந்து தொட்டுப்பார்க்க ஆசைப்படுகிறார்கள்.
அழுமூஞ்சி சீரியல்களுக்கு வரவேற்பு உள்ளதா?
சின்ன பாப்பா பெரிய பாப்பா இரவு 10 மணிக்கு வருகிறது. அதை பார்க்க பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் டிவி முன்பு உட்கார்ந்து விடுகிறார்கள். குடும்பத்தோடு சந்தோசமாக பார்த்து என்சாய் பண்ணுகிறார்கள். நாங்கள் செய்யும் காமெடி அவர்களுக்கு பெரிய ரிலாக்சாக உள்ளது. அதனால் இப்போது அழுகாச்சி சீரியல்கள் மேல் எனக்கு பெரிய ஆர்வம் இல்லை. அதேபோல் வில்லி கேரக்டரும் இனிமேல் பண்ணுவதில்லை என்று முடிவெடுத்து விட்டேன்.
காரணம், விரைவில் எனக்கு பேரன் பிறக்கப்போகிறான். சீரியல்களில் நான் வில்லியாக நடிப்பதைப்பார்த்து பேரன் பேத்திகள் பயப்படக்கூடாது. பாட்டி பயங்கரமானவள் என்று சொல்லிவிடக்கூடாது. அதனால் குழந்தைகளும் விரும்புகிற மாதிரியான காமெடி வேடங்களில் நடிக்கவே ஆசைப்படுகிறேன். என்னை சுற்றியிருப்பவர்கள் எல்லோரும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை.
ராதிகா, ரம்யா கிருஷ்ணன் போன்று சீரியல்கள் தயாரித்து லீடு ரோலில் நடிக்கும் ஆர்வம் உள்ளதா?
எனக்கு அந்த அளவுக்கெல்லாம் பொறுமை கிடையாது. சீரியல், சினிமா என்று பிசியாக நடிப்பதையே எதற்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறீர்கள். ரிலாக்ஸா பண்ணுங்க என்று எனது பிள்ளைகள் சொல்கிறார்கள். பிள்ளைகளின் திருமணம் முடிந்து விட்டது. அதனால் தேவையில்லாமல் நானாக எதற்காக தலைவலியை தூக்கி தலையில் போட்டுக்கொள்ள வேண்டும். மேலும், எனக்கு வீட்டில் ஓய்வாக இருப்பது ரொம்ப பிடிக்கும். டயம் இல்லையே என்று வருத்தப்படுகிறேன். என் வீடு, என் குழந்தைங்க, சமையல் கட்டு இதுக்குத்தான் முதலிடம் கொடுப்பேன். அதற்கு அப்பாற்பட்டுதான் நடிப்பு என்று நினைப்பவள் நான்.
வீட்டில் நீங்கள் எந்த மாதிரியான அம்மா?
நான் ஒரு டீச்சர் மாதிரி. பசங்ககிட்ட கண்டிசனா இருப்பேன். அதே சமயம் ப்ரண்ட்லியாவும் இருப்பேன். நான் கொடுக்கிற மரியாதையை திருப்பி தரவேண்டும் என்று நினைப்பேன். கிவ் அண்ட் டேக்கன் பாலிஸி மாதிரி. நான் பெரிய அளவில் படிக்கவில்லை. அதனால் என் பிள்ளைகளை படிக்க வைக்கிறேன். திருமணத்திற்கு பிறகும்கூட என் மகள் மற்றும் மருமகள் இருவருமே படிப்பை தொடர்கிறார்கள். அதற்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறேன்.
சமீபகாலமாய் சில சீரியல்களில் ஆபாசம், வன்முறை காட்சிகள் இடம்பெறுகிறதே?
நான் நடிக்கிற சீரியல்களில் அப்படி எதுவும் இல்லை. இருபது நிமிசத்தில் ஒரு மெசேஜ் சொல்கிறோம். இந்த மாதிரி ஏமாறாதீங்க என்று ஒரு விழிப்புணர்ச்சியை நாங்கள் சின்ன பாப்பா பெரிய பாப்பாவில் கொடுக்கிறோம். மேலும், எந்த தொழிலாக இருந்தாலும் நம்முடைய இன்வால்வ்மெண்டுதான் முக்கியம். அதோடு 50 வயதில் நான் நினைக்காத வேடங்களில் எல்லாம் நடிக்கிறேன். ரொம்ப சந்தோசமாக உள்ளது.
சமீபத்திய நடிகைகளில் நடிப்பினால் உங்களை கவர்ந்த நடிகை யார்?
சின்னப் பாப்பா பெரிய பாப்பாவில் எங்களுடன் நடிக்கும் மதுமிதா சூப்பராக நடிப்பார். ஒரு சின்ன நாட் சொன்னால் பல கோணங்களில் அதை நடித்துக்காட்டுவார். திறமையான நடிகை. நானே அவரை பிரமித்துப்பார்ப்பேன். இப்படி நடிக்கவா அப்படி நடிக்கவா என்று நடித்துக்காட்டுவார். உடன் நடிப்பவர் இப்படி நடிப்பதால் நமக்கும் ஆர்வம் அதிகமாகும்.
மேலும், நாங்களெல்லாம் களிமண்ணு. டைரக்டர்கள்தான் எங்களை வெளியே கொண்டு வந்தார்கள். ஆனால் இப்போது வருபவர்கள் ஒன்னு சொன்னா நூறு பண்ணிக்காட்டுறாங்க. அதோடு நாங்களெல்லாம் பயப்படுவோம். டைரக்டர் சொல்றதை மட்டும்தான் செய்வோம். ஆனால் இப்போது வருகிறவர்கள் டைரக்டர் சீன் சொன்னதும் தங்கள் தரப்பில் இருந்தும் சில ஐடியாக்களை அவர்கள் முன்பு தைரியமாக வைக்கிறார்கள். டைரக்டர்களும் நல்ல ஐடியாக்களை ஏற்றுக்கொள்கிறார்கள்.
எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா?
சத்தியமாக வரமாட்டேன். நான் அரசியல் சூழலில்தான் வளர்ந்தேன். அவர்கள் படும் கஷ்டங்களை பார்த்தவள் என்பதால் அந்த ஆசையே எனக்கு வரவில்லை. மேலும் நான் ரொம்ப சிம்பிளான வாழ்க்கைதான் விரும்புவேன். ஒரு சின்ன லைன் வீட்டில் ஒரு வயர் கூடையில காய்கறி வாங்கி வந்து சமைத்து சாப்பிடனும். எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். அவர்தான் என்னை இந்த கலைத்துறையில் இப்போதுவரை பிசியாக வைத்திருக்கிறார். சந்தோசமான வாழ்க்கையை கொடுத்திருக்கிறார் என்று மனநிறைவோடு பேசுகிறார் நளினி.