ரூ.66 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் |
திருமுருகன் இயக்கத்தில் நாதஸ்வரம், தொடரில் நடித்து பிரபலமானவர் முனீஷ்ராஜா. பெஸ்ட் காமெடியனாக வேண்டும் என்பதே எனது நோக்கம் என்று கூறும் இவர், நாதஸ்வரம் சீரியலுக்கு பிறகுதான் சின்னத்திரை தொடர்களில் காமெடியை அதிகப்படுத்தினார்கள் என்கிறார். தினமலர் இணையதளத்திற்காக அவரிடம் சில கேள்விகள்...
நாதஸ்வரம் தொடரில் உங்கள் வேடத்துக்கு எந்த மாதிரி ரீச் கிடைத்தது?
நாதஸ்வரத்தில் ஒரு அரை மாற்றுத்திறனாளி போன்று நடித்தேன். அந்த ரோலில் நடிப்பதற்கு முன்பு டைரக்டரிடம் நடித்துக்காட்டினேன். அதில் ஒன்றை ஓகே பண்ணி இந்த மாதிரி நடி என்றார். நல்ல சுதந்திரம் கொடுத்தார். அதனால் அந்த கதாபாத்திரத்தில் ஈடுபாடு காட்டி நடித்தேன். அதனால் எனது காமெடியான நடிப்பை நேயர்கள் பெரிய அளவில் ரசித்தனர்.
அந்த தொடரில் நான் சம்பந்தம் என்ற கேரக்டரில் நடித்தேன். நான் மட்டுமின்றி அதில் நடித்த பல நடிகர்களையும் காமெடி காட்சிகளில் நடிக்க வைத்தார் திருமுருகன். அது பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆனது. அதற்கு முன்புவரை மாமியார் மருமகள் சண்டைகளைத்தான் சீரியல்களில் பெரிதாக போக்கஸ் செய்தனர். ஆனால் நாதஸ்வரம் தொடரில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்ததைப் பார்த்த பிறகுதான் மற்ற சீரியல்களிலும் காமெடி காட்சிகளை இணைக்கத் தொடங்கினர். அதோடு, நாதஸ்வரம் சீரியலுக்கு பிறகுதான் சிறந்த சின்னத் திரை நகைச்சுவை நடிகருக்கான விருது கொடுக்கத் தொடங்கினர்.
காமெடி வேடம் நீங்களாக தேர்ந்தெடுத்ததா? இல்லை எதிர்பாராதவிதமாக அமைந்ததா?
எனக்கு காமெடி சென்ஸ் அதிகமாக உண்டு. அதை கண்டுபிடித்ததால்தான் என்னை காமெடி வேடத்தில் நடிக்க வைத்தார் திருமுருகன். அதோடு நான் மதுரைக்காரன். எங்க ஊர்க்காரங்க பெரும்பாலும் காமெடியாகத்தான் பேசுவார்கள். அந்த வகையில் காமெடி என்பது என்கூடவே பிறந்தது என்று சொல்லலாம். அதையடுத்து இப்போது நடித்து வரும் குலதெய்வம் சீரியலில் ஒரு டிடெக்டிவ் ஏஜென்டாக நடிக்கிறேன். அதுவும் காமெடி ரோல்தான். ஹீரோவுக்கு நல்லது செய்வது போன்ற பாசிட்டிவான வேடம். தொடர்ந்து இதுபோன்று காமெடி வேடங்களுக்குத்தான் முதலிடம் கொடுக்கப்போகிறேன்.
பிடித்த காமெடி நடிகர் யார்?
வடிவேலு. அவர் ஒரு கம்ப்ளீட் ஆர்ட்டிஸ்ட். அவர் நடித்த காமெடி என்றால் விரும்பி பார்ப்பேன். அந்த வகையில், வடிவேலு மாதிரி ஒரு காமெடியன் ஆக வேண்டும் என்பதுதான் எனது இலக்காக உள்ளது. நாதஸ்வரம், குலதெய்வம் சீரியல்களில் காமெடியனாக நடித்த அனுபவத்தைக் கொண்டு சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்று அதற்கேற்ற வாய்ப்புகளை தேடி வருகிறேன்.
என்னென்ன படங்களில் நடித்துள்ளீர்கள்?
இந்தியா பாகிஸ்தான், ஒரு பந்து நாலு ரன் ஆகிய படங்களில் நடித்தேன். இப்போது திறப்பு விழா, திருவிக பூங்கா, குத்தூசி போன்ற படங்களில் நடித்திருக்கிறேன். இந்த படங்கள் அனைத்திலுமே காமெடி வேடம்தான். சினிமாவில் பெஸ்ட் காமெடியனாக வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருப்பதால் அதை மனதில் கொண்டு கேரக்டர்களை செலக்ட் பண்ணி நடித்து வருகிறேன் என்கிறார் முனீஷ்ராஜா.