லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | 'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா |

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக தற்போது சிவன் ஸ்ரீனிவாஸ் பொறுப்பேற்றுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றதும், சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என்று முதல் வாக்குறுதியை அளித்த அவர், வேலையில்லாமல் இருக்கும் சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கு வேலை கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இந்நிலையில், தற்போது உறுப்பினர் அல்லாதவர்களுக்கு வேலை கொடுப்பதை தடுக்கும் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளது. காரணம், சில டிவி தொடர்களில் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் உறுப்பினர் அல்லாதவர்களும் நடித்து வருகின்றனர். இதன்காரணமாக உறுப்பினர்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால் இனிமேல் உறுப்பினர்களுக்கு மட்டுமே வேலை கொடுக்க வேண்டும் என்ற புதிய ஆணை பிறப்பிக்கப்பட உள்ளது. அதேபோல் குறைவான தொகையை செலுத்தி உறுப்பினராகியிருப்பவர்கள் முழுதொகையை யும் செலுத்த வேண்டும். இல்லையேல் அவர்கள் உறுப்பினர் பட்டியலில இருந்து நீக்கப்படுவார்களாம்.
மேலும், சிலசமயங்களில் அவுட்டோர்களுக்கு நடிகர்களை அழைப்பவர்கள், அவர்களை சில தினங்கள் ஓய்வாக இருக்க வைத்துவிட்டு அதன்பிறகே நடிக்க வைக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஓய்வாக இருந்த நாட்களுக்கு சம்பளம் கொடுப்பதில்லையாம். ஆனால் இனிமேல் கால்சீட் வாங்கிய அனைத்து நாட்களுக் கும் சம்பளம் கொடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாம். இது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் வருகிற ஏப்ரல் மாதத்தில் இருந்து அமலுக்கு வருகிறதாம்.




