ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை | 28 ஆண்டுகளுக்குபின் நடிக்கும் டிஸ்கோ சாந்தி | ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான் கேரக்டரில் முதலில் நடித்தவர்கள் : கேப்டன் பிரபாகரன் குறித்து ஆர்.கே.செல்வமணி | கூலி : பெங்களூருவில் அதிகபட்ச கட்டணம் ரூ.2000 | 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு வரும் மெஹ்ரின் பிரதிஸ்டா | பிளாஷ்பேக்: மங்கம்மாவின் வெற்றியும், தோல்வியும் |
இசைஞானி இளையராஜா எப்போதுமே தனி பேட்டிகளுக்கு உடன்படுவதில்லை. அதுவும் குறிப்பாக தொலைக்காட்சிகளுக்கு தனித்து பேட்டி தருவது அபூர்வமானது. ஆனால் இளையராஜாவின் நடவடிக்கைகளில் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மீடியாக்களை அடிக்கடி சந்திக்கிறார், பேட்டி கொடுக்கிறார். சில கேள்விகளுக்கு கோபப்பட்டாலும் பல கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்கிறார். வெள்ள பாதிப்பின்போது நேரடியாக சென்று உதவுகிறார். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதன் அடுத்த கட்டமாக விஜய் டி.வியில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி நடத்தும் காப்பி வித் டிடி நிகழ்ச்சியில் பங்கேற்றிறருக்கிறார். அவரது 1000மாவது படமாக தாரை தப்பட்டை வெளிவருவதையொட்டி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேட்டியளித்துள்ளார். சினிமா, இசை, ஆன்மீகம், பொது பிரச்சினைகள் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லி உள்ளார். வருகிற பொங்கல் அன்று இந்த பேட்டி ஒளிபரப்பாகிறது.